திராவிட இயக்கங்கள்தான் பெண்களுக்கு கல்வி உரிமையை பெற்றுத் தந்தன சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு பெருமிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 11, 2023

திராவிட இயக்கங்கள்தான் பெண்களுக்கு கல்வி உரிமையை பெற்றுத் தந்தன சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு பெருமிதம்

தென்காசி,மே11 - தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா நேற்று  (10.5.2023) நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு பள்ளிக்கு நிலம் மற்றும் அரங்கம் அளித்த நன்கொடையாளர்களை கவுரவித்தார். பள்ளி நூற் றாண்டு மலரை அப்பாவு வெளியிட முதல் பிரதியை ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.

விழாவில் அப்பாவு கூறியதாவது: கல்வி ஒரு காலத்தில் சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக இருந் தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் எல்லா தரப்பினரும் சமமாக கல்வி கற்பதற்கான சட்டம் இயற்றப்பட்டது. நீதிக் கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பெண்கள் படிப்பதற்கும், வாக்களிப்பதற்கும் உரிமை பெற்று தந்தது.

திராவிட மாடல் ஆட்சியின் முதல் புள்ளி நீதிக் கட்சி. அதன் தொடர்ச்சியாக திராவிட இயக்கங்கள் பெண்களுக்கு படிப்பு மற்றும் இதர உரிமைகளை பெற்றுத் தந்தன. மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என மேனாள் முதலமைச்சர் கலைஞர் தலைமையிலான அரசு அறிவித்தது.

சாமானியரின் குழந்தைகளும் பன்னாட்டு தரத்தில் கல்வி கற்க வேண்டும்என ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கி தரமான கல்வியைவழங்கி வருகிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு. இவ்வாறு அப்பாவு கூறினார்.

முன்னதாக, தலைமை ஆசிரியர்செந்தூர்பாண்டி வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகபீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் தாமஸ் தனராஜ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment