பாராட்டத்தக்க முடிவு: முதலமைச்சராகிறார் சித்தராமையா; சிவக்குமார் துணை முதலமைச்சர் காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 18, 2023

பாராட்டத்தக்க முடிவு: முதலமைச்சராகிறார் சித்தராமையா; சிவக்குமார் துணை முதலமைச்சர் காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

பெங்களூரு, மே 18 சித்தராமையா கரு நாடகா மாநில முதலமைச்சராக பதவி யேற்பார் என்று காங்கிரஸ் மேலிடம் அதிகாப்பூர்வமாக இன்று (18.5.2023) அறி வித்துள்ளது.

இதுகுறித்த செய்தி வருமாறு:

கருநாடகா சட்டசபைத் தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. பிறகு கருநாடக முதலமைச்சர் குறித்து ஆலோசனை தலைநகர் டில்லியில் கடந்த 4 நாள்களாக நடைபெற்றது. 

பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

இதனை அடுத்து கருநாடக முதல மைச்சராக சித்தராமையா தேர்வு செய் யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். 

துணை முதலமைச்சராக டி.கே.சிவக் குமார் இருப்பார் என்றும், வரும் மக்க ளவைத் தேர்தல் வரை கருநாடக காங் கிரஸ் தலைவர் பதவியில் அவர் நீடிப்பார் எனவும் அவர் தெரிவித்தார். 

இந்த நிலையில், கருநாடகாவின் புதிய முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக் குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங் கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறி வித்துள்ளது.  ஒருமித்த கருத்துடன் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித் துள்ளது.

பெங்களூரில் இன்று இரவு 7.30 மணிக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப் பினர்களின் கூட்டம் நடக்க உள்ளது. பெங் களூரில் 20 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

No comments:

Post a Comment