பக்தி வியாபாரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 23, 2023

பக்தி வியாபாரம்!

திருவண்ணாமலை ஈசுவரர் கோயிலில் பூஜை களை கைப்பேசி செய்தி மூலம் தரிசனம் செய்யும் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது - பக்தி மூடத்தன வியாபாரம் அறிவியல் ரீதியில் மிக ஜோராக நடக்கிறது. 

மற்றவற்றுக்கெல்லாம் ஆகமம்பற்றி வாய் கிழிய பேசும் ஆன்மிகவாதிகள், பார்ப்பனர்கள், சங்கராச் சாரியார்கள் இதைப்பற்றி வாயைத் திறக்காதது ஏன்? 

1976, மே மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இந்து மாநாட்டில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி  ஓர் உண்மையை ஒப்புக்கொண்டு பேசிய தற்காக அவர் வாயில் சர்க்கரை தான் கொட்ட வேண்டும்.

அவர் பேசினார், ‘‘மக்களிடையே கஷ்டங்கள் அதி கரித்து வருவதால் கடவுள் மீது அதிக பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோயி லுக்குப் போவதையும், மதச் சடங்குகளில் கலந்து கொள் வதையும் ஒரு ‘பேஷனாக' கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலானவர்களிடம் வர்த்தக மனப் பான்மை காணப்படுகிறது'' என்று பேசினாரே அதுதான் இப்பொழுது நினைவிற்கு வந்து தொலைகிறது - பலே பலே பக்தி பிசினஸ்!

No comments:

Post a Comment