அறந்தாங்கி, மே 24- 22.05.2023 அன்று மாலை 5 மணிக்கு அறந் தாங்கி மாவட்டம் கீரமங்கலத் தில் அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி மாவட்ட இணைச் செயலாளர் க. வீரையா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கரம் பக்குடி க.முத்து, மாநில இளை ஞரணி துணை செயலாளர் ச. குமார் ஆகியோர் முன்னிலை வைத்து உரையாற்றினர்.
மாநில மாணவர் கழக செயலாளர் இரா. செந்தூர பாண்டியன் ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களையும் நிறைவேற் றுவது, மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றியத்தில் வைக்கம் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம் நடத்துவது, ஒன்றிய கழக வாரியாக குடும்ப சந்திப்பு நடத்துவது, இல்லம் தோறும் கழக கொடி ஏற்றுவது, ஜூன் 4 ஆம் தேதி பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கீரமங்கலத்தில் மிக சிறப்பாக நடத்துவது, விடுதலை சந்தா புதுப்பித்து ஒன்றிய வாரியாக சந்தாக்களை திரட்டி தருவது மற்றும் புதிய மாணவர்கள் இளைஞர்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கை விரிவுபடுத்துவது தொடர்பா கவும் உரையாற் றினார்.
அறந்தாங்கி நகர அமைப் பாளர் ஆ. வேல்சாமி, திருவரங் குளம் ஒன்றிய தலைவர் மு.தேவேந்திரன் , மணல்மேல் குடி ஒன்றிய இளைஞரணி தலை வர் ந.செல்வ மணி,சா. துரை, ந.அம்பிகாபதி,மா.விஜய்பிர காஷ், காரல் மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்:
1. மே 13ஆம் தேதி ஈரோட் டில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்ற செயல்படுவோம் என முடிவு செய்யப்பட்டது.
2. ஜூன் 4ஆம் தேதி அறந் தாங்கி மாவட்டம் கீரமங்கலத் தில் பெரியாரியல் பயிற்சி முகா மில் ஏராளமான மாணவர் களை இளைஞர்களை கலந்து கொள்ள செய்வதென தீர் மானிக்கப்படுகிறது.
3. வைக்கம் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டங் களை ஒன்றிய வாரியாக நடத் துவதென முடிவு செய்யப்படு கிறது.
No comments:
Post a Comment