பெங்களூரு, மே 9 காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அவரது குடும்பத் தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஒலிப்பதிவு அண்மையில் வெளி யானது.
இது தொடர்பாக காங்கிரஸ் ஏற்கெ னவே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இந்நிலையில் மல்லிகார் ஜூன கார்கே தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சித்தாப்பூர் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோடு மீது பெங்களூருவில் உள்ள டிஜிபி அலுவ லகத்தில் புகார் அளித்தார். அப்போது மல்லிகார்ஜூன கார்கே, ‘‘கர்நாடக மண்ணின் மகனான என்னை குடும்பத் தோடு கொல்லப்போவதாக பாஜக வேட்பாளர் பேசி இருக்கிறார். கர்நாடக மக்கள் தக்க பதிலை கொடுப்பார்கள்'' என்றார். காவல்துறையினர் மணிகண்ட ரத்தோடு மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக் குப்பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment