சென்னை, மே 23- அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 29ஆவது தேசிய மாநாடு மும்பையில் அண்மை யில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, சங்கத்தின் பொதுச் செய லாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அகில இந்திய வங்கி ஊழியர் கள் சங்கத்தின் 29ஆவது தேசிய மாநாடு கடந்த 13 முதல் 15ஆம் தேதிவரை நடந்தது. இதில், நாடு முழுவதும் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற் றனர்.
இந்த மாநாட்டில் பொதுத் துறை வங்கிகளைப் பலப்படுத்த வலியுறுத் தப்பட்டது. குறிப்பாக, வங்கிச் சேவை இல்லாத பகுதிகளில் வங்கிக் கிளைகளைத் திறக்க வேண் டும்.
முன்னுரிமை துறைகளான விவ சாயம், வேலைவாய்ப்பை பெருக் கும் துறைகள், சுகாதாரம், கல்வி, ஊரக மேம்பாடு,பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் துறை உள் ளிட்டவற்றுக்கு அதிக கடனுதவி வழங்க வேண்டும். கடந்த 50 ஆண்டுகளில் 30 தனியார் வங்கிகள் மோசமான நிர்வாகம் காரணமாக திவால் ஆகின. எனவே, பொதுத் துறை வங்கிகளைப் பலப்படுத்துவ தோடு, அவற்றை தனியார் மயமாக்கக் கூடாது. இதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் பலஆயிரம் கோடி கடனை செலுத் தாமல் நிலுவையில் வைத்துள்ளன. அவற்றை வசூலிக்க வேண்டும். ஹிண்டன்பர்க் அறிக்கை காரண மாக, அதானி குழுமத்தின் மீது சந்தேகங்கள் நிலவுவதால் அந்தக் குழும நிறுவனங்களுக்கு வழங்கப் பட்ட வங்கிக் கடன்களை திரும்பப் பெற வேண்டும்.
பொதுத் துறை வங்கிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment