கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டா ரக்கார வட்ட மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக மருத்துவர் வந்தனா தாஸ் பயணியாற்றி வந்தார். இவர் 9.5.2023 அன்று இரவுப் பணியில் இருந்துள்ளார். கொல்லம் அஜீசியா மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த டாக்டர் வந்தனா, தனது பயிற்சியின் ஒரு பகுதியாக கொட்டாரக்கரா வட்ட மருத்துவமனையில் பணி புரிந்து வந்தார்.
பூயப்பள்ளி பகுதியில் வீட்டில் தகராறு செய்த சந்தீப் என்ற இளை ஞரை காவல் துறையினர் மற்றும் அவரது உறவினர்கள் அதிகாலை 4 மணியளவில் மருத்துவ பரிசோ தனைக்காக கொட்டாரக்கார வட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையின் போது, அவருக்கு காலில் காயம் ஏற்பட் டது. அதற்கு சிகிச்சை அளிக்கும் போது சந்தீப் மருத்துவமனையிலும் ரகளையில் ஈடுபட்டு உள்ளார். மேலும் அங்கிருந் தவர்களை தாக்கிய துடன் மருத்துவ உபகரணைங்களை உடைத்து உள் ளார்.
கடும் ரகளையில் ஈடுபட்ட அவர், அங்கிருந்தவர்களை கத்தி ரிக்கோலை கொண்டு தாக்கி உள்ளார். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் காயமடைந்த டாக்டர் வந்தனா தாஸ் சிகிச்சைக் காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக உயிரிழந்தார். அவரது உடலில் 5 இடங்களில் கத்திரிக்கோலால் குத்தப்பட்டு இருந்தது.
கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்
கேரள மாநிலம் கொல்லத்தில் மருத்துவப் பரிசோதனைக்கு சென்ற குற்றவாளியால், மருத்துவர் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவர்களை பாதுகாக்க முடியாவிட்டால் மருத்துவ மனை களை மூட வேண்டுமா என்று கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது போன்ற நிகழ்வுகள் நாட்டில் இதற்கு முன்பு நடந்துள்ளதா? காவல் துறையினரிடம் துப்பாக்கி இல்லையா? மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது காவல்துறையின் முதன்மை கடமையல்லவா என்று நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
பிறகு எதற்கு காவல்துறைக்கு துப்பாக்கி கொடுக்க வேண்டும் என்று கேரளா உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குற்ற வாளிகளை மருத்துவப் பரிசோத னைக்கு அழைத்து செல்லும் போது பாதுகாப்பு வழங்க வேண்டியது நீதிமன்றம் அல்ல. அரசுதான் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடை பெறாத வண்ணம் காவல் துறை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் கேரள டிஜிபி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment