ஆசிரியர் பயிற்சிக்கான போட்டித் தேர்வை ரத்து செய்க மூன்றாவது நாளாக பட்டினிப் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 12, 2023

ஆசிரியர் பயிற்சிக்கான போட்டித் தேர்வை ரத்து செய்க மூன்றாவது நாளாக பட்டினிப் போராட்டம்

சென்னை, மே 12 ஒன்றிய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிய ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். தமிழ்நாட்டில் 2012-ஆம் ஆண்டுமுதல் ஆசிரியர் தேர்வுவாரியத்தால் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி நியமனத் துக்காக மீண்டும் ஒரு போட் டித் தேர்வு நடத்தப்படும் என்று 2019-ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இந்த முறையை கைவிடக் கோரிஆசிரியர்கள் பலர் கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.

இந்நிலையில் தமிழ் நாடுஆசிரியர் தகுதித் தேர் வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பில் சென்னை டிபிஅய் வளாகத்தில் கடந்த மே 9ஆ-ம் தேதி முதல் தொடர் பட்டினிப் போராட் டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பங்கேற்று தங்கள் கோரிக்கையை வலி யுறுத்தி போராடிவருகின் றனர். இதுவரை 35 பேர் மயக்கமடைந்து மருத் துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்

டுள்ளனர். 

இது குறித்து போராட்டக் குழுவினர் பேசும்போது, ‘‘திமுக தனது தேர்தல் அறிக்கை 177இ-ல் கூறியபடி தங்களுக்கு பணிவாய்ப்பை வழங்க வேண்டும்.

ஆசிரியர் பணிக்கான வயது உச்ச வரம்பை 57 ஆக உயர்த்த வேண்டும். கடந்த 3 நாட் களாக உடலை வருத்தி போராடி வருகிறோம். எங்கள் கோரிக்கை நிறை வேறும் வரை போராட்டம் தொடரும்’’ என்றனர்.


No comments:

Post a Comment