தூய சைவ உணவால் ஆபத்து? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 13, 2023

தூய சைவ உணவால் ஆபத்து?

தாய்ப்பாலில் இருந்து திட உணவிற்கு மாறிய 6 மாத காலத்தில் இருந்து தூய சைவ உணவுகள்  மட்டுமே கொடுத்ததன் விளைவாக தீவிர துத்தநாகச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது 2 வயது குழந்தை.

 இந்தியாவில் தற்போது தூய சைவ உணவு குறித்த பரப்புரைகள் ஹிந்துத்துவ அமைப்பினராலும், சில மத அமைப்பினராலும் பரப்பப்பட்டு வருகிறது, குறிப்பாக இந்தியாவில் பாஜக ஆளும் பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு உணவு வழங்கும் இசுக்கான் அமைப்பு மண்ணுக்குள் விளையும் தாவரங்களைக் கூட சாப்பிடக்கூடாது என்று கூறி அது அரக்க குணத்தைக் கொடுக்கும் இந்தியாவில் ஆன்மீகத்தில் பாதிப்பு ஏற்பட்டது அதிக அளவு ஹிந்துக்கள் சைவமாக இருந்த போதும் மண்ணுக்குள் விளையும் உணவுகளைச் சாப்பிடுவதால் தான் என்று விளம்பரம் செய்துவருகின்றனர். 

 குறிப்பாக கருப்பாக பிறந்ததற்கு காரணமே மண்ணுக்குள் உண்ண உணவு வகைகளைச்சாப்பிடுவதுதான் என்று சத்சங்கில் கூறி வருகின்றனர். 

 இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தைச்சேர்ந்த ஒரு சிறுமி கடுமையான தோல் நோய் பாதிப்பில் சிகிச்சைக்கு வந்துள்ளார். இதற்கு காரணம் என்ன என்று புரியாமல் சிகிச்சை அளித்த மகாத்மாக காந்தி அரசு மருத்துவர்குழுவில் உள்ள மருத்துவர்கள் ரோகித் கோத்தாரி மற்றும் சஞ்சய் காரே போன்றவர்கள் அக்குழந்தையின் உணவு முறை குறித்து விசாரித்த போது நோயின் உண்மை தெரிந்தது. 

 அந்தக்குழந்தையின் பெற்றோர் தீவிர சைவ உணவுப் பரப்பு வலையில் சிக்கியவர்கள்.  தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை தவிர்த்து குழந்தை முதலே தாவர சூப் வகைகளோடு பச்சை இலைதழைகளையும் கொடுத்து வந்துள்ளனர். இதனால் குழந்தையின் உடலில் துத்தநாதக சத்து முற்றிலும் இல்லாமல் போனது. 

துத்தநாகச்சத்து தோல் பிணைப்பிற்கு தேவையான முக்கிய தனிமம் ஆகும். இது பால், இறைச்சி, முட்டை, மற்றும் சிலவகை கிழங்குகளிலும் தானியங்களிலும் உள்ளது, ஆனால் குறிப்பிட்ட கிழங்குவகைகள் உண்பது பாவம் என்றும், சிறுதானிய வகைகளை தீண்டத்தகாதவர்களின் உணவு என்று கூறியதன் விளைவு அத்தகைய உணவுகளை குழந்தைக்கு கொடுக்காமல் உப்பு சப்பில்லாத பச்சை காய்கறி, இலைதழைகளைக் கொடுத்ததன் விளைவு, குழந்தையின் உடலில் துத்தநாகச்சத்து முற்றிலும் இல்லாமல் போனது இதனால் தோல் பிணைப்பு இல்லாமல் மெல்ல மெல்ல கிழியத்துவங்கி உடல் முழுவதும் குழந்தைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதன் காரணமாக அக்குழந்தை தீக்காயத்தால் ஏற்படும் வேதனையை நாள் தோறும் அனுபவித்து வருகிறது.  தற்போது இக்குழந்தைக்கு பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைகள் அளித்து வருகின்றனர். 

( May 6, 2023, at NEJM.org.)


No comments:

Post a Comment