புயலாக
வங்கக் கடலில் வரும் 7ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 9ஆம் தேதி புயலாக வலுப் பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மய்ய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தகவல்.
உத்தரவு
அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு விவரங்கள் கணக்கெடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
மீட்பு
ஆபரேஷன் காவேரி நடவடிக்கையின் கீழ், சூடானிலிருந்து இதுவரை 2,930 இந்தியர்கள் மீட்கப்பட்டு, தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நிறைவு
பத்தாம் வகுப்பு, பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு பணிகள் நேற்று (3.5.2023) நிறைவடைந்தன. இதையடுத்து, தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளன.
தடுக்க
உணவுப் பொருள்கள் கடத்தலைத் தடுக்கவும், தரமான உணவுப் பொருள்களை வழங்கும் வகை யிலும் தமிழ்நாட்டில் முதல் முறையாக ‘க்யூ ஆர் குறியீடு’ முறை உதகையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்.
நியமனம்
உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சா வளியைச் சேர்ந்த அஜய் பங்கா (வயது 63) நியமிக்கப்பட்டுள்ளார் என அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திட்டம்
வணிக வாடிக்கையாளர்கள் தங்கள் சரக்குகளை லாரி சேவைகள் மூலம் அனுப்புவதற்கு அஞ்சல்துறை சார்பில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பாதிப்பு
இந்தியாவில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் குழந் தைகள் தலசீமியா (மரபணு) பாதிப்புடன் பிறப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழில்பயிற்சி
அய்.டி.அய். படித்த மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழில் பழகுநர் பயிற்சி முகாம் மே 8இல் வடசென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
விளக்கம்
வணிக வளாகங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனையைக் கொண்டு வந்தது அ.தி.மு.க. ஆட்சி யில்தான் என அமைச்சர் வி.செந்தில பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
உணவு
மத்திய ஆயுத காவல் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவில் சிறு தானியத்தை அறிமுகப்படுத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
வெளியீடு
வட்டாரக் கல்வி அலுவலர் காலிப் பணி யிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பும் வகையில் தற்காலிக முன்னுரிமைப் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை வெளியீடு.
அறிவுறுத்தல்
பருவமழை பொழிவில் ‘எல் நினோ’ நிகழ்வு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ‘மோசமான சூழலை’ எதிர்கொள்ள தயாராக இருக்கவும், கரீஃப் பருவத்துக்குத் தேவையான விதைகள் போதிய அளவில் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யுமாறும் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தி யுள்ளது.
No comments:
Post a Comment