திருச்சி, மே 2 தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் மற்றும் ஆக்கி திருச்சி சார்பில் கோடை கால இலவச பயிற்சி முகாம் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள செயற்கை புல்தரை மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த முகாம் வருகிற 15- ஆம் தேதி வரை, தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலையில் 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் நடக்கிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். முகாமில் ஆக்கி விளையாட்டின் நுணுக்கங்கள் மற்றும் விதிமுறைகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு சீருடைகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆண்டனி ஜோயல்பிரபு, ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மூத்த வீரர்கள் கலந்து கொண்டு வீரர்களுக்கு பயிற்சிகள் குறித்து எடுத்து கூறினர். முகாமிற்கான ஏற்பாடுகளை திருச்சி ஆக்கி சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியன் செய்துள்ளார்.
Tuesday, May 2, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment