திருப்பூர் மாவட்டம் தாரா புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே கொங்கு ரமேஷ் என்பவர் ஓட்டல் வைத்துள்ளார். இவர் பாஜ மாநில நிர்வாகியாக உள்ளார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜ தலைவர் மங்களம் ரவி புதிய தலைவராக தேர்வு செய்யப் பட்டார். இதில், கொங்கு ரமேசுக்கும் மங்களம் ரவி என்பவருக்கும் மாவட்ட தலைவர் பதவி பெறு வதில் பிரச்சினை ஏற்பட்டு வந் துள்ளது. இந்நிலையில், திருப் பூர் தெற்கு மாவட்ட பாஜ தலைவராக மங்களம் ரவி பதவி பெற்றார்.
இந்நிலையில், 30.4.2023 அன்று தாராபுரம் பேருந்து நிலையம் அருகே பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி கேட்பதற்காக மாநில நிர்வாகி கொங்கு ரமேஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது கொங்கு ரமேசுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், பேருந்து நிலையத் திற்கு வந்த திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி திடீரென கொங்கு ரமேஷ் மீது தாக்குதல் நடத்தினார். அப்போது ரமேசுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ் வரன் மற்றும் நிர்வாகி மூவரும் சேர்ந்து மங்களம் ரவியை தாக்கினர்.
இந்த மோதலில் மங்களம் ரவி, இந்து மக்கள் கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் ஈஸ் வரன், நிர்வாகி சங்கர் மற்றும் கொங்கு ரமேஷ் காயமடைந்தனர். அவர் கள் கோவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.
இதையறிந்த பாஜ நிர்வாகிகள், தாராபுரம் அரசு மருத்துவ மனையில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தாரா புரம் அரசு மருத்துவமனையில் காவல் கண்காணிப்பாளர் தனராசு தலைமையில் காவல் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் ஏராள மான காவல் துறையினர் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.
கட்சியில் பதவியை பெறுவது மற்றும் உட் கட்சி பூசல் காரண மாக பாஜ நிர்வாகிகள் பொதுவெளியில் அரை நிர்வாண கோலத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment