புதுடில்லி,மே25- இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங் களில் உள்ள அரசு ஆய்வகங்களில் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு நிறுவன மருந்துகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய் யப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் தயாரித்து அனுப்பப்பட்ட இரு மல் மருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
இதையடுத்து இந்திய நிறுவனங் கள் ஏற்றுமதி செய்யக்கூடிய இரு மல் மருந்துகள் பிற நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு முன்பு அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும்.
இந்த உத்தரவு என்பது ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து நடை முறைக்கு வரும். அவர்கள் வழங் கும் சான்றிதழையும் சமர்ப்பித் ததால் தான் மருந்தை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்புதலை வெளி நாட்டு வர்த்தக இயக்குநரகம் வழங்கும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment