விழுப்புரத்தில் சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகம் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 4, 2023

விழுப்புரத்தில் சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகம் சந்திப்பு

விழுப்புரம், மே 4- 3.5.2023 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்ற விழுப்புரம் சட்டக்கல்லூரி திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் - விழுப் புரத்தில் சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகம் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் அரசு சட்ட கல்லூரி திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் 3.5.2023 அன்று மாலை அய்ந்து மணிக்கு விழுப்புரம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க கட்டடத்தில் எழுச்சி யோடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந் தூரபாண்டியன் தலைமை வகித்தார். விழுப்புரம் சட்டக் கல்லூரி மாணவரும், சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக  மாநில அமைப்பாளருமான இளமாறன் வரவேற்புரையாற்றினார்.

திராவிடர் கழக மாநில  அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன்  அறிவாசான் தந்தை பெரியார் தமிழர் தலைவர்ஆகியோரின் உழைப் பால் பெற்ற கல்வி, வேலைவாய்ப்புகள் பற்றியும், மாணவர்கள் திராவிட மாணவர் கழகத்தில் இணைந்து செயலாற்றவேண்டிய அவசியத்தை விளக்கியும் கருத்துரையாற்றினார். 

மண்டல கழக செயலாளர் தா.இளம்பரிதி, மாவட்டத் தலைவர் ப.சுப்பராயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திண்டிவனம் மாவட்ட கழக செயலாளர் இர.அன்பழகன், மாவட்ட அமைப் பாளர் பா.வில்லவன்கோதை,  விழுப்புரம் நகர செயலாளர் ச.பழனிவேல், மண்டல இளைஞரணி செயலாளர் பகவான்தாசு, மாவட்ட இளைஞரணி செயலாளர்  சதீசு, பெரியார்பிஞ்சு ச.எத்திஸ்ட் ஆகி யோர் பங்கேற்று மகிழ்ந்தனர்.  

சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழகம் சார்பில் விழுப்புரத்தில் வைக்கம் நூற்றாண்டு விழா நடத்துவது எனவும்,கோவையில் ஆகஸ்டு 5 ஆம் தேதி நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழக 80 ஆவது ஆண்டு மாநில மாநாட்டில் திரளான தோழர்களுடன் பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment