'ஜெய் பஜ்ரங் பலி' : ஆண்டவன் கைவிட்ட பி.ஜே.பி.! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 17, 2023

'ஜெய் பஜ்ரங் பலி' : ஆண்டவன் கைவிட்ட பி.ஜே.பி.!

- சிலந்தி -

அம்பி : என்ன மாமா இப்படி ஆயிடுத்தே?

மாமா : என்னத்தடா சொல்றே?

அம்பி : கர்நாடகா எலக்ஷன் முடிவு பி.ஜே.பி.யை புரட்டிப் போட்டுடுத்தே?

மாமா : ஆமாண்டா அம்பி; இவ் வளவு படுமோசமா தோத்துடும்னு நாம் நினைக்கல்லே...

அம்பி : நம்ப மோடிஜி, அமித்ஷாஜி மேஜிக் எல்லாம் எடுபடாம போயிடுத்து...

மாமா : அபிஷ்டு...அபிஷ்டு அதற்கு... அப்படி எல்லாம் பேசப்படாது. அவா போனதாலேதான் இந்த அளவு சீட்டாவது கெடச்சுது...

அம்பி : அவா போன எடத்துலையும் பி.ஜே.பி. தோத்துடுச்சுன்னு பேப்பர்ல போடுறாளே மாமா

மாமா: பேப்பர்ல போட்டா என்ன? அதை மறைச்சு வாட்ஸ் ஆப்பு, டிவிட்டர், பேஸ்புக்குன்னு சோசியல் மீடியா இல்லையா?... அதுல அவாள விட்டுக் கொடுக்காம பிரச்சாரம் பண்ணனும்.. எது நிஜமுன்னு தெரியாம ஜனங்க மண்டையை உடைச்சுக்கணும்.. 

அம்பி: நியூஸ் சேனல்ல வலதுசாரி போர்வையிலே பேசுற நம்மவா எல்லாம் மோடிஜிக்கு சப்பைக் கட்டு கட்டித்தான் பேசுறா... ஜனங்களை எவ்வளவு நாளுக்குத்தான் ஏமாத்துறது... மோடி இப்பல்லாம் ‘ஓவரா ஆக்ட்' பண்ணி மாட்டிக்கிறாரே மாமா..

மாமா : எதடா சொல்ற?

அம்பி : 'ஜெய் பஜ்ரங்பலி' ன்னு சம்பந்தமே இல்லாம ஆஞ்சநேயரை அரசியல்லே இழுத்துவிட்டு அவர் அவமானப்பட்டதில்லாமே ஆஞ்சநேயரையும் அவமானப் படுத்திட்டாரே...

மாமா : ராமஜென்ம பூமின்னு பகவான் ராமபிரானை வைச்சு அரசியல் நடத்தி உ.பி. எல்லாம் ஜெயிச்சது மாதிரி ஆஞ்சநேயரை வச்சு அரசியல் நடத்தி கர்நாடகாவில ஜெயிக்க நெனச்சார்.. அவர் நெனச்சது தப்பில்ல.... ஆனா ஜனங்க இப்ப விழிச்சிட்டாங்க... 

அம்பி: ஆமா மாமா... ஹனுமான் பிறந்த இந்த கர்நாடகான்னு சொன்னாரு...

மாமா : ஆமாண்டா அம்பி; ஹனுமான் ஜென்ம பூமி ஆந்திராவிலுள்ள திருமலைதான்னு ஒரு தரப்பார் சொல்றா... மற்றொரு தரப்பார் கருநாடகாவிலுள்ள ஹம்பின்னு ஊர்ஜிதம் செய்றா... இன்னும் ஒரு தரப்பார் ‘நாசிக்'குன்னு சொல்றா.

அம்பி : அதான்... பிரதமரே கர்நாடகான்னு தீர்க்கமாக சொல்லிவிட்டாரே; மாமா!

மாமா: அதை பெரிசா எடுத்துக்காதேடா... ஆயிரம் நாக்கு படைச்ச ஆதிசேஷனாட்டம் நம்ப பிரதமருக்கு பல நாக்குகள்! நாளை ஆந்திராவிலே எலக்ஷன்னா திருமலைதான் ஆஞ்சநேயர் ஜென்ம ஸ்தலம்னு பேசிடுவார்.. எங்கெங்கே எதெல்லாம் தேவையோ அதன்படி வேஷம் கட்டிடுவார் நம்ம மோடிஜி!

அம்பி : சரியாச் சொன்னேள்; மாமா! எங்கே போறாரோ அந்த எடத்துக்குத் தக்கபடி நடை, உடை, தொப்பி எல்லாத்தையும் பச்சோந்தி போல மாத்திக் கிறதுல நம்ப மோடிஜிக்கு இணையே இல்ல...

மாமா : அப்படி எல்லாம் பச்சோந்தின்னு பெரிய வாள பேசக்கூடாதுடா அம்பி... பச்சோந்தி தன் நிறத்தை மாத்துதுன்னா, அது தனது உசிர காப்பாத்திக்கிறதுக்காக அப்படி மாறுது! நம்ப பிரதமர் அப்படியா!

அம்பி : பச்சோந்தி உயிரைக் காக்க மாத்திக்குதுன்னா பிரதமர் தனது பதவியைக் காப்பாத்திக்க மாத்திக் கிறாருன்னு பேசுறாளே மாமா! 

மாமா : அவாளப் பத்தி இப்படி எடக்கு மடக்கா பேசப்படாதுடா அம்பி.. 

அம்பி : மோடிஜி ராமரையும், ஆஞ்ச நேயரையும் வைச்சு போலியா அரசியல் நடத்துறது இராமருக்கும் புடிக்கலே; ஹனுமானுக்கும் கோபம் வந்துடுச்சுன்னு நம்பவாளே பேச ஆரம்பிச்சுட்டா மாமா! 

மாமா : எதனாலே அப்படி பேசறா? 

அம்பி : ஆஞ்சநேயரைக் காட்டி அரசியல் நடத்தின கருநாடகத் தேர்தலில் தோத்துட்டாளே... அதாவது ஹனுமான் பிறந்த பூமின்னு அவர் கூறின கருநாட கத்திலே தோத்துட்டாளே...

மாமா : ராம ஜென்மபூமி உ.பி.யிலே ஜெயிச்சுட்டுத் தானே இருக்கா.. 

அம்பி : 2021 ல் நடந்த எலக்ஷன்லே ராமர் கோவில் இருக்கிற எடத்துலே தோத்துட்டாளே... அயோத் யாவிலே உள்ள இராமர் கோவில் கட்டப்படுகிற இடத்துலேயே பி. ஜே.பி. தோத்துடுச்சு... ராமர் பேரிலே அரசியல் நடத்துறது அந்த பகவானுக்கே பொறுக்கலை; அதனாலே தோற்கடிச்சிட்டாங்கன்னு அப்போ எதிர்க் கட்சிக்காரர் சொன்னாளே மாமா. 

மாமா : நீ பிராமண ஆத்துப் பிள்ளையா தோணலயே... அயோத்தியில இல்லேன்னா என்ன; வாரணாசியிலே ஜெயிச் சிட்டோம்னு எதாவது சப்பைக் கட்டு கட்ட வேண்டாமோ? 

அம்பி : அது இல்லே மாமா.... அங்கேயும் 2021 ல் நடந்த லோக்கல்பாடி எலக்ஷன்ல பி.ஜே.பி. தோத் துட்டா.. மோடியோட தொகுதியிலேயே பி.ஜே.பி.க்கு ஜனங்க ஓட்டுப்போடலேன்னு பேப்பர்ல எல்லாம் வந்துடுச்சு.

மாமா : அப்படியா சொல்றே.. நேக்குத் தெரியாதே;

அம்பி : சத்யம்தான் பேசுறேன். மாமா மோடிஜி ஜெயிச்ச வாரணாசி லோக்சபா தொகுதியிலே உள்ள 40 ஜில்லா பஞ்சாயத்து சீட்லே 2021லே எட்டுல (8) மட்டுந்தான் அப்போ பி.ஜே.பி. ஜெயிச்சுது!... ராமபிரான் கோவில் கட்டுற அயோத்யாவிலே உள்ள 40 வார்டுல ஆறே ஆறுல (6) மட் டும்தான் பி.ஜே.பி. 'வின்' ஆயிருக்கு... 

மாமா : இதெல்லாம் நேக்குத் தெரியாதே? 'மீடியாவிலே பெரிசா வரலேயே?

அம்பி: எப்படி மாமா அவா பெரிதுபடுத்துவா...? பல மீடியா பி.ஜே.பி. கண்ட்ரோலிலே இருக்கும் போது இதைப் பெரிதுபடுத்திப் போடுவாளா?

அதை விடுங்க... இன்னொரு அதிர்ச்சியும் இருக்கு... நம்ம உ.பி. சீப் மினிஸ்டர் யோகி ஆதித் யநாத் இருக்காரில்லையா...

மாமா : அவருக்கென்ன... நல்லாத்தானே இருக்கார்... 

அம்பி : அவர் நல்லாத்தான் மாமா இருக்கார். ஆனா அவரோட சொந்த பூமியான கோரக்பூர்லேகூட அப்போ பி.ஜே.பிக்கு அதிக ஸ்தானம் கிடைக்கலே...

மாமா : யார் பேச்சையாவது கேட்டுட்டு அசட்டு பிசட்டுன்னு உளறாதே அவா ரொம்ப செல்வாக்கு வாய்ந்தவா..

அம்பி : உளறல மாமா...  உண்மையத்தான் சொல்றேன். கோரக்பூரிலுள்ள 68 வார்டுல 20 வார்டுல தான் பி.ஜே.பி.யால ஜெயிக்க முடிஞ்சிருக்கு... அங்ககூட பி.ஜே.பியால மெஜாரிட்டி வாங்க முடியல...

மாமா : தரித்திரம் புடிச்சவனே... வந்ததிலிருந்து நல்ல சேதியே சொல்ல மாட்டேங்கிறேயே...

அம்பி : இதை எல்லாம் நானாவா சொல்றேன்? இப்ப, இதையெல்லாம் பார்க்கும்போது நேக்கு ஒரு சந்தேகம் வருது மாமா...

மாமா : என்னடா அப்படி பெரிய சந்தேகம்?

அம்பி : 2024-ல்ல வர்ற பார்லிமெண்ட் எலக்ஷன்ல பி.ஜே.பி. ஜெயிக்கிறது கஷ்டம்னு சொல்றா... அது நடந்துடுமோன்னு... 

மாமா : பீடை... பீடை.. நல்ல வார்த்தையே உன் வாயிலேயிருந்து வரமாட்டேன்றது... முதல்ல போய் வாயை கங்காஜலம் எடுத்து கழுவு...

அம்பி : நேக்கு மட்டும் பி.ஜே.பி. ஜெயிக்கக் கூடாதுன்னு ஆசையா; என்ன? ஜனங்ககிட்டே பி.ஜே.பி. எவ்வளவு நாளைக்கு பொய் சொல்லி காலம் தள்ள முடியும்? எல்லாம் விழிச்சுட்டா! கடவுள் பேரைச் சொல்லி ஏமாத்தி, கட்சி நடத்துறதெல்லாம் இனிமே செல்லுபடியாகாதுன்னு தோணுது! 

மாமா : துக்கிரித்தனமா பேசாதே; இப்ப அதாவது 2023- ல் உ.பி.யில் நடந்த லோக்கல் பாடி 'எலக்ஷன்ல பி.ஜே.பி. பெரிய வெற்றி பெற்றுள்ள செய்தியைப் பார்க்கலையா? அயோத்தியிலே மேயர் தேர்தல்ல அபரிமிதமான ஜெயத்தை பி.ஜே.பி. அபேட்சகர் பெற்றுள்ளாரே? 

அம்பி : உண்மைதான் மாமா... முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்திக்கு மட்டும் இரண்டு முறை சென்று பிரச்சாரம் நடத்தினார். என்ன பேசினார்ன்னு தெரியுமோ? ஜனநாயகங்கிற உற்சவத்தில் ராம பக்தர்கள்மீது குண்டு பாய்ச்சியவா ஓட்டுவாங்கினா அது தவறான தகவலை தந்திடும்னு அவரும் ராமரை வைச்சே தேர்தல் பிரச்சாரம் செஞ்சார்.

மாமா : தேர்தலே மேயர் கேண்டிடேட் ஜெயிச் சுட்டாரோ இல்லியோ... அது ராம பகவான் பி.ஜே.பி.யோட இருக்கிறதை காட்டலையோ?

அம்பி : இல்லே மாமா... மேயர்தான் ஜெயிச்சாரே தவிர 60 இடங்கள் உள்ள அந்த கார்ப்பரேஷன்ல 27 இடத்தைத்தான் பி.ஜே.பி. பெற்றுள்ளது. அதுல பெரிய வேடிக்கை என்னன்னு பார்த்தேள்னா, அயோத்தி ராமர் கோவில் உள்ள வார்டுல பி.ஜே.பி. தோத்தது மட்டுமல்ல; அங்க முஸ்லிம் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

மாமா: நன்னா விபரம் தெரிஞ்சுதான் பேசுறியா?

அம்பி : நன்னா தெரிஞ்சுதான் மாமா பேசுறேன்... அந்த முஸ்லிம் பையன் முதன்முறையா நின்னு ஜெயிச் சுட்டான்

மாமா : என்னடா சொல்றே..? தலையை சுத்துதே!

அம்பி : இன்னும் பல விபரம் கேட்டா மயக்க மடைஞ்சே விழுந்திடுவேள். அந்த 'வார்டு' யார் பேரிலே இருக்குத் தெரியுமோ? ராம ஜென்ம பூமிக்கு ஆதாரபுருஷரா இருந்த ராம் அபிராம் தாஸ் வார்டுன்னு அதுக்கு நாமகரணமே சூட்டப்பட்டுள்ளது. அங்கேதான் பி.ஜே.பி. வேட்பாளர் தோத்துப் போயிருக்கார். 

மாமா: அந்த வார்டுல முஸ்லிம்கள் அதிகம் பேரோ...? 

அம்பி : அதுவுமில்லே மாமா... அந்த வார்டுல 3884 ஹிந்து ஓட்டுகள் உள்ளன. முஸ்லிம் ஓட்டுகள் வெறும் 440 தான்! அந்த வார்டுல வெற்றி பெற்ற அன்சாரி 996 ஓட்டுகள் வாங்கி ஜெயிச்சிருக்காரு... 

மாமா: என்ன கொடுமைடா இது... கேட்கவே காதிலே நாராசம் பாய்ஞ்சது போல இருக்கே... 

அம்பி : ஒண்ணுமட்டும் நல்லாத் தெரிய ஆரம் பிச்சுருச்சு மாமா... ஜனங்க முழிச்சுக்க ஆரம்பிச்சுட்டா... ராமர், ஆஞ்சநேயர் என்று கடவுள் பேராலும் ‘இந்து’ என்று மதத்தின் பேராலும் இனி அவாள் ஏமாத்த முடியாது... அதைத்தான் கருநாடக மாநிலத் தேர்தல், உ.பி.யில் நடந்த லோக்கல்பாடி தேர்தல் காட்டுது ... (மாமா... அசந்து போய்... ஹே ராம்... ஜெய் பஜ்ரங்பலி... என முணுமுணுக்கிறார். 

அதைக் கேட்ட அம்பி “அதெல்லாம் இனி ஒர்க் அவுட் ஆகாது மாமா. ஆண்டவனும் நமக்கு எதிரா இருக்கார்.. அவா பேரைச் சொல்லி ஏமாத்தலாமா?” என்று கூற; எங்கோ தொலைதூரத்தில் 'எத்தனை காலந்தான் ஏமாத்துவார் இந்த நாட்டிலே... சொந்த நாட்டிலே' எனும் பாடல் ஒலிக்கிறது.)

நன்றி: முரசொலி, 17.5.2023


No comments:

Post a Comment