புதுடில்லி, மே 28 இன்று (28.5.2023) நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்ட அதே நாளில் டில்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் பெரியளவில் காயங்கள் அல்லது சேதங்கள் ஏற்பட்டதாக இப்போது வரை தெரியவில்லை.
சில வினாடிகள் நீடித்த இந்த நில நடுக்கம், காலை 11.23 மணியளவில் ஏற் பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். டில்லி மட்டுமின்றி, சண்டிகர் உள்படப் பஞ்சாப் மற்றும் அரியானாவின் பல பகுதி களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆப் கானிஸ்தானின் ஃபைசாபாத் அருகே 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகி யுள்ளதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு மய்யம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment