திருச்சி,மே27- திருச்சி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட் டம், புத்தூர் பெரியார் மாளிகை, அன்னை மணியம்மையார் அரங் கத்தில் 23.05.2023 அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமை யேற்று உரையாற்றுகையில் குறிப் பிட்டார். 2025ஆம் ஆண்டு நடை பெறவிருக்கும் சுயமரியாதை இயக் கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளி லும் தெருமுனை கூட்டங்களை நடத்தி கழக அமைப்பு இல்லாத கிராமம் இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும்.
இயக்க பொறுப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தை அறிந்து கொண்டு அனைத்து பகுதிக ளுக்கும் சென்று கிளைக் கழகங்கள் தோறும் சந்திப்பு கூட்டங்களை நடத்தி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். 90 வயதை கடந்த நிலையிலும் இச்சமுதாயத் தின் முன்னேற்றத்திற்காக அய ராது உழைத்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் தொடர்ந்து பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு தான் இயங்கிக் கொண்டும் நம்மைப் போன்றவர்களை இயக் கிக் கொண்டும் இருக்கிறார்கள்.
திராவிடர் கழகத்தின் அனைத்து நிகழ்வுகளையும், செய லளவில் தந்தை பெரியாரின் செயல்பாடுகளையும் ஆவணப் படுத்தும் பெரும் பணியையும் தமிழர் தலைவர் மேற்கொண்டு வருகிறார்.
மே மாதம் 13 ஆம் தேதி ஈரோடு மாநகரில் நடைபெற்ற பொதுக் குழுத் தீர்மானங்களைத் தோழர் கள் சிறப்பாக நிறைவேற்றித் தர வேண்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் புதிய பொறுப் பாளர் கள் நியமனம் சிறப்பாக உருவாக் கப்பட்டுள்ளது!
தலைவர், துணைத் தலைவர், செயலவைத் தலைவர், பொரு ளாளர், பொதுச் செயலாளர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், மகளிரணி. இளைஞர் அணி மாணவர் கழகப் பொறுப்பாளர்கள், தலைமைக் கழக அமைப்பாளர்கள் எனச் சீரிய முறையில் வடிவமைக் கப்பட்டு, பொறுப்புகள் பகிர்ந் தளிக்கப்பட்டு, சிறப்பான முன் னெடுப்புகள் தொடங்கியுள்ளன!
பொதுக் குழுவின் அற்புதமான தீர்மானங்களில் ஒன்றான சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா, சிந்துவெளி அகழ்வாய்வுகள் மூலம் திராவிடர்களின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்திய சர்ஷான் மார்ஷல் ஆய்வு நூற் றாண்டு விழா, கலைஞர் நூற் றாண்டு விழா ஆகியவை நமது இரண்டாண்டு தொடர் பணிகள் என ஆசிரியர் தனித்துவமாகக் குறிப்பிட்டு முன்மொழிந்துள் ளார்கள்!
தோழர்கள் தாங்கள் வசிக்கும் மாவட்டம் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அவ்வகை யில் திருச்சி கழக மாவட்டத்தில் மாநகராட்சி 1, வார்டுகள் 65,
மணப்பாறை, துவாக்குடி என 2 நகராட்சிகள், கூத்தைப்பார், சிறுகமணி என 2 பேரூராட்சிகள், திருவெறும்பூர், அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, மருங் காபுரி என 5 ஒன்றியங்கள். இதில் மொத்தமாக அடங்கிய ஊராட் சிகள் எண்ணிக்கை 137.
ஆக மாவட்டம் குறித்த அனைத்தையும் நாம் அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத் தோழர்களும் இந்தப் பட்டியலை தயார் செய்து வைத்திருக்கவும்.
பிறகு எங்கு அமைப்பு இருக் கிறது? இல்லாத பகுதி எது? எனக் கணக்கிட்டு ஆசிரியர் கூறியது போல, “கழகக் கிளை, கழகக் கொடி இல்லாத ஊரே இருக்கக் கூடாது”, என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும்!
அமைப்பு இல்லாத ஊர்களில் ஒருமித்த கட்சிகள், இயக்கங்களின் ஆதரவுடன் கூட்டங்களை ஏற் பாடு செய்ய வேண்டும்!
மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழக அமைப்புகள் மிக வீரியமாக செயல்பட வேண்டும் என்பது நமது தலைவரின் பெரு விருப்பமாகும்!
அந்தந்த பகுதியில் வசிக்கும் தோழர்கள், “எங்கள் பகுதியில் கூட்டம் நடத்த வேண்டும்“, என ஆர்வமாக மாவட்டப் பொறுப் பாளர்களிடம் கேட்க வேண்டும்!
ஆண்டுதோறும் பயிற்சி வகுப் புகள் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆசிரி யர் அறிவுறுத்தலுக்கு இணங்க மே 27 முதல், ஜூலை 30 வரை தொடர் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளன. இதில் குற்றாலம் பயிற்சி முகாமும் நடைபெற இருக்கின்றது!
ஆசிரியர் அவர்களும் தமிழ் நாடு முழுக்க மாவட்டக் கலந்துரை யாடல் கூட்டம் மூலம் தோழர் களைச் சந்திக்க இருக்கிறார்கள்!
நாமும் உற்சாகத்தோடு பணி யாற்றி, அவரவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள சிறு, சிறு பொறுப்புகளை முழுமையாகச் செயல்படுத்தி, ஆசி ரியர் அவர்களுக்கு வெற்றிக் குவி யல்களை விரித்து மகிழ்வோம்!
இளைஞர்களை, மாணவர் களை இயக்கத்தின்பால் ஈர்ப் பதற்கு பெரியாரியல் பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்டத்தில் நடத்துவதற்கு முயற்சி மேற் கொள்ள வேண்டும், ஜூன் மாதம் குற்றாலத்தில் நடைபெறும் பெரி யாரியல் பயிற்சி பட்டறைக்கு திருச்சி மாவட்டத்திலிருந்து அதிக மான இளைஞர்களை அனுப்பி வைப்பதற்கான முயற்சியில் இயக் கப் பொறுப்பாளர்கள் ஈடுபட வேண்டும்.
திராவிடர் கழகத்தில் மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி இந்த மூன்று அணிகள் வலுப்படுத் தப்பட வேண்டும் அப்போதுதான் இயக்கம் உயிரோட்டமாக இருக் கும். ஆகவே மாணவர்கள், இளை ஞர்கள் மகளிரை இயக்கத்தில் சேர்க்கும் வண்ணம் ஆங்காங்கே தெருமுனை கூட்டங்களை நடத்தி புதிய உறுப்பினர்களை இயக்கத் தில் சேர்ப்பதற்கான முயற்சியை மாவட்ட திராவிடர் கழகம் மேற் கொள்ள வேண்டும்” என வலியு றுத்தி சிறப்புரையாற்றினார்.
மாவட்ட தலைவர் ஞா.ஆரோக் கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், கழக தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி. வில்வம் ஆகியோர் முன்னிலையேற்று இயக்க செயல்பாடுகள் குறித்தும், இனி செய்ய வேண்டிய செயல் திட்டங்கள் குறித்தும் எடுத்துக் கூறி கருத்துரையாற்றினர்.
இந்நிகழ்வில் மாணவர் கழகத் தோழர் யாழினி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாணவர் கழகத் தோழர் அறிவுச் செல்வன் கடவுள் மறுப்பு கூறி னார்.
தொடர்ந்து மாவட்ட மகளிர் பாசறை தலைவர் க.அம்பிகா, மாவட்ட மகளிர் பாசறை செயலா ளர் சங்கீதா, மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி, மாவட்ட மகளிரணி தலைவர் ரெஜினா, திருவெறும்பூர் ஒன்றிய செயலா ளர் போலீஸ் காலனி இரா.தமிழ் சுடர், பாச்சூர் அசோகன், மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் வசந்தி, மாநகர தலைவர் துரைசாமி, உறையூர் பா.சுல்தான் பாஷா, மணிகண்டம் ஒன்றிய தலைவர் சா.செபஸ்தியான், மாவட்ட இளைஞரணி செயலா ளர் மகாமணி, மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் ராஜசேகர் விடுதலை செல்வம், பாலகங்கா தரன், பெல் அசோக்குமார், மாவட்ட ப.க தலைவர் மதிவாணன் மாநகர ப.க தலைவர் குப்த்துதீன் . காட்டூர் சங்கிலி முத்து . மொபாரக் அலி, சங்கிலிமுத்து, ராஜேந்திரன், சேவியர், கோகுல்ராஜ், மு.ஜெயராஜ், குத்புதீன், இராஜசேகர், பெல் ஆறுமுகம், பெரியார் மாளிகை திருநாவுக்கரசு, மாநில இளைஞரணி துணை செயலாளர் வே.இராஜவேல் ஆகியோர் கருத் துரையாற்றினர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1:
மே - 13 ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் 2:
திருச்சி கழக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு, சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா, தெருமுனைக் கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீர்மானம் 3:
திருச்சி மாவட்டத்தில் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட் டறை நடத்துவது எனவும், புதிய மாணவர்கள், இளைஞர்களை பெருமளவில் பங்கேற்கச் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீர்மானம் 4:
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகரம், கிராமங்களில் புதிய உறுப்பினர்களை சேர்த்து புதிய கிளைக் கழகங்களை உருவாக்குவ துடன் கிளைகள் தோறும் கழகக் கொடியை ஏற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment