ஒன்றிய அரசுப் பணிக்கான தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 17, 2023

ஒன்றிய அரசுப் பணிக்கான தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி

ஒன்றிய அரசு அலுவல கங்களில் காலியாக உள்ள கணினி இயக் குபவர் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இள நிலை செயலக உதவி யாளர் போன்ற பல பணிக் காலியிடங்களுக்கு ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு    வெளியிட்டுள்ளது. 

கணினி இயக்குபவர் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் பணி காலியிடங்களுக்கு கல்வித்தகுதி 12ஆ-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். வயதுவரம்பு 18.10.2023 அன்று தேதியில் 18 முதல் 27 ஆகும்.

வயதுவரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள். ஓ.பி.சி.பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும்   மாற்றுத்திறனாளி களுக்கு 10 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு உண்டு. மொத்த பணிக் காலியிடங்கள் தோராய மாக 1,600 (இந்தியா முழுவதும்). இந்த பணியிடங்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி தேதி 8.6.2023 ஆகும். மேலும் விவரங் கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணைய தள முகவரியை பயன்படுத்திக் கொள் ளலாம். 

மேலும் இந்த போட் டித் தேர்வை தமிழ் மொழியில் எழுத அனு மதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment