திஸ்பூர், மே 13- பாஜக ஆட்சி அதிகாரம் கொண்டுள்ள இடங்களிலெல்லாம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை நடை முறைப்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறது.
அந்த வகையில் மதச் சிறுபான்மையினரான இசுலாமியர்களைக் குறி வைத்து பொதுசிவில் சட்டம் குறித்து ஆராய அசாம் மாநில பாஜக அரசு குழு அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை இயற்ற வேண் டும் என பாஜக ஆட்சி செய்யும் மாநி லங்களும், பாஜக நாடாளுமன்ற உறுப் பினர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இது நாட்டின் பன்முகத்தன் மையைப் பாதிக்கும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், பொது சிவில் சட் டம் கொண்டுவருவதன் முக்கிய நோக் கமாக இருக்கும் பலதார மணத்தைத் தடை செய்வதற்கான நடவடிக்கையை அசாம் மாநில அரசு தொடங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா கடந்த 9.5.2023 அன்று வெளியிட்ட நிலையில், அதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அம்மாநில அரசு தற்போது அமைத்துள்ளது.
இதுகுறித்து ஹிமந்த விஸ்வ சர்மா தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது:
மாநிலத்தில் பலதார மணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சட்டம் இயற்ற மாநில சட்டப்பேர வைக்கு உள்ள அதிகாரம் குறித்து ஆய்வு செய்ய 4 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு அமைக் கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு 60 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு 1937-ஆம் ஆண்டு முஸ் லிம் தனிநபர் (ஷரியத்) சட்டம் மற்றும் மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டுவருவது தொடர் பாக அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மாநிலத்தில் பாஜக அரசு இரண்டு ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ததை குறிக்கும் வகையில் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற பத்திரி கையாளர் சந்திப்பில் இதுகுறித்துப் பேசிய முதலமைச்சர் சர்மா, ‘அசாம் அரசு பொது சிவில் சட்டத்தை நடை முறைப்படுத்தும் முயற்சி எதுவும் எடுக்கவில்லை. அதற்கு தேசிய அளவில் ஒருமித்த கருத்து அவசியம். அதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு மேற் கொள்ளும். பலதார மணத்தை தடை செய்வதே மாநிலத்தின் நோக்கம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
திருமணம், விவாகரத்து உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் வெவ்வேறு மதங்களில் பல்வேறு சட்ட நடை முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒரே நாடு, ஒரே மொழி என்று எல்லாவற் றிலும் கூறி வருகின்ற பாஜக ஒரே மதம் என்பதை வலியுறுத்துகின்ற வகையில் அனைத்து மதங்களுக்கும் ஒரே சட்டம், நடைமுறை என்று மதவாதப்போக்கில் பொதுசிவில் சட்டத்தை முன்னெடுத்து வருகிறது. அரசமைப்புச்சட்டம் கூறுவ தற்கு எதிராக மத அடிப்படைவாதங்களை மக்களிடையே ஆட்சி அதிகார ஆணவப்போக்கில் திணிக்க முற்பட்டு வருகிறது பாஜக.
No comments:
Post a Comment