ஓட்டுநர்களின் குறைகளைக் கேட்டவாறே லாரியில் பயணம் செய்த ராகுல்காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 25, 2023

ஓட்டுநர்களின் குறைகளைக் கேட்டவாறே லாரியில் பயணம் செய்த ராகுல்காந்தி

புதுடில்லி, மே 25- காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் இந்திய ஒற்றுமைப் பயணம் மேற் கொண்டார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்த இந்திய ஒற்றுமைப் பயணம் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து கருநாடக தேர்தலின் போதும் ராகுல்காந்தி இரு சக்கர வாகனத்தில் சென்று 'டெலிவரி பாய்'களுடன் உரையாடினார். பேருந்தில் பயணித்து பயணிகளு டன் உரையா டினார்.

இந்நிலையில், ராகுல்காந்தி சமீபத்தில் டில்லியில் இருந்து சண் டிகர் வரை லாரியில் சென்றார். அவர் லாரி ஓட்டுநருடன் உரை யாடியபடி பயணம் மேற் கொண்டார்.

லாரியில் ராகுல்காந்தி பயணம் செய்யும் காட்சிப் பதிவை வெளியிட்ட காங்கிரஸ், லாரி ஓட்டுநர் களின் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள அவர் பயணம் மேற் கொண் டார். இந்திய சாலைகளில் 90 லட்சம் லாரி ஓட்டுநர்கள் உள்ளனர். அவர் களுக்கென்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ராகுல்காந்தி லாரி ஓட்டுந ரின் மனதின் குரலை கேட்கிறார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment