தாம்பரம் தொழிலாளர் அணி மாநாடு: தருமபுரி மாவட்டத்தில் இருந்து தனி வாகனங்களில் தோழர்கள் பங்கேற்க முடிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 17, 2023

தாம்பரம் தொழிலாளர் அணி மாநாடு: தருமபுரி மாவட்டத்தில் இருந்து தனி வாகனங்களில் தோழர்கள் பங்கேற்க முடிவு!

தருமபுரி, மே 17- சென்னை தாம்பரத்தில் மே 20 ஆம் தேதி நடைபெறும் மாநில  தொழிலாளர் அணி மாநாட்டில் பங்கேற்க தருமபுரி மாவட்டத்தில் இருந்து இரண்டு வாகனங்களில் அய்ம்பதுக்கு மேற் பட்ட தொழிலாளரணி தோழர் கள் பங்கேற்பதென கலந்துரையா டல் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. 

தருமபுரி திராவிடர் கழக தொழிலாளர் அணி கலந்துரை யாடல் கூட்டம், தருமபுரி பெரியார் மன்றத்தில் 15-5-2023 அன்று 5 மணி அளவில் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர்  பெ.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. 

மாவட்ட அமைப்பாளர் சி.காமராஜ் வரவேற்புரையாற்றினார், மாவட்ட தலைவர் வீ.சிவாஜி கூட்டத்தின் நோக்கத்தை பற்றி முன்னுரையாற்றினார். 20.5.2023ஆம் தேதி தாம்பரத்தில் நடைபெறும் திராவிடர் கழக தொழிலாளர் அணி நான்காவது மாநில மாநாட்டில் கலந்து கொள் வது குறித்து தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் சிறப்புரையாற்றினார். 

மாநில மகளிர் அணி செயலா ளர் தகடூர் தமிழ்செல்வி, பொறியா ளர் கோ. கேசவன், மண்டல ஆசிரி யரணி அமைப்பாளர் இர. கிருஷ் ணமூர்த்தி, விவசாய அணி பொறுப் பாளர் ஊமை. காந்தி, மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை,மாவட்ட தொழி லாளர் அணி செயலாளர் மு. சிசுபாலன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் மாஸ்டர் மாணிக்கம், நல்லம்பள்ளி ஒன்றிய தலைவர் மாத. செந்தில், விடுதலை வாசகர் வட்ட தலைவர் க.சின்ன ராஜ், நகர பொறுப்பாளர் கண்.இராமச்சந்திரன், தர்மபுரி வேலு, வரகூர்  சிவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

தீர்மானம்

மே 20 ஆம் தேதி தாம்பரத்தில் நடைபெறும் நான்காவது மாநில தொழிலாளர் அணி மாநில மாநாட்டில் தர்மபுரி மாவட்டத் தின் சார்பில் இரண்டு வாகனங் களில் 50க்கும் மேற்பட்ட தோழர் கள் பங்கேற்பது என முடிவு செய் யப்படுகிறது.

மாவட்ட தொழிலாளர் அணி புதிய பொறுப்பாளர்கள்: மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் மு. சிசுபாலன், மாவட்ட அமைப் பாளர்  - மாஸ்டர் மாணிக்கம், மாவட்ட துணை தலைவர் - வரவூர் தம்பிதுரை, மாவட்ட துணை செயலாளர் - அரங்க கோவிந்தராஜ்  ஆகியோர் புதிய பொறுப்பாளர் களாக நியமிக்கப்பட்டனர்.

நடப்பு ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் தொழிலாளர் அணியை மேலும் வளர்த்தெடுக்கும் விதமாக அனைத்து பகுதிக்கும் சென்று  தொழிலாளர்களை கண் டறிந்து 200க்கும் மேற்பட்ட தொழி லாளர் அணித் தோழர்களை உறுப்பினராக்குவது என தீர்மா னிக்கப்படுகிறது.

நன்கொடை

தொழிலாளர் அணி மாநாட் டில் பங்கேற்க வாகன வசதிக்காக நன்கொடை வழங்கியவர் விவரம்:

சி.காமராஜ் ரூ.500 ,வீ.சிவாஜி 1000, ஊமை. ஜெயராமன் 1000, தகடூர் தமிழ்ச்செல்வி 1000, கோ. கேசவன் 2000, இர.கிருஷ்ணமூர்த்தி 1000, ஊமை காந்தி 200, மா.செல்லதுரை 200, மு.சிசுபாலன் 500, மாஸ்டர் மாணிக்கம் 500, மாத செந்தில் 500, மொத்தம் ரூ.8400 அளித்தனர்.

No comments:

Post a Comment