கணினியில் பதிவேற்ற வசதிக்காக நில வகைகள் பெயர் மாற்றம் தமிழ்நாடு அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 24, 2023

கணினியில் பதிவேற்ற வசதிக்காக நில வகைகள் பெயர் மாற்றம் தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, மே 24 - நத்தம் நில வகைகளை கணினிமயமாக்கும் பணிகளை எளிதாக்க, அந்த வகை நிலங்கள் இனி ‘ரயத்துவாரி மனை’ என ஒரே வகை பெய ரிட்டு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கான உத்தரவை வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டது. உத்தரவு விவரம்:

நிலப் பதிவேடுகளைக் கணினிமயமாக்கும் பணி கடந்த 2003ஆம் ஆண் டில் தொடங்கப் பட்டது. ‘ஆ பதிவேடு’ மற்றும் நகர நிலங்களுக்கான பதி வேடுகள் முழுமையாக கணினி மயமாக்கப்பட் டுள்ளன. கிராம நத்தம் வகை நிலங்களைக் கணி னிமயமாக்குவதற்கான மென்பொருள் விரை வில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

இவ்வாறு கணினிமய மாக்கும்போது, நிலங்களுக்கான வகைப் பெயர்கள் வெவ்வேறாக இருந்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். உதாரணத்துக்கு, அரசு மனை எனும் பெயர், கணினி மென்பொருளில் அரசு நிலமாகக் கருதப் படும்.

 இதனால், நிலங்களை தனிநபர்கள் பெயர் மாற் றம் செய்யத் தடை ஏற் படும். இதைக் கருத்தில் கொண்டு, நத்தம் நிலங் களுக்கான பெயர்களை ஒரே மாதிரியாகக் கொண்டு வர வேண்டு மென தமிழ்நாடு அரசி டம், நில நிர்வாக ஆணை யரகம் கேட்டுக் கொண் டது. 

இதையடுத்து, நிலங்களின் வெவ்வேறு பெயர்கள் மாற்றப்பட்டு, ஒரே மாதிரியான பெயர் கொடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. 

நத்தம் நன்செய், நத்தம் புன்செய், நத்தம் மனை, நத்தம் புறம்போக்கு, பட்டா தாரரின் பெயருடன் கூடிய நத்தம், பட்டாதாரர் பெயரு டன் கூடிய தனிநபர் நிலம், அரசு மனை, சர்கார் மனை ஆகியன இனி ரயத்துவாரி மனை என அழைக்கப் படும்.

நத்தம் அடங்கலில் சர்கார் புறம்போக்கு மற் றும் காலி நத்தம், காலி மனை ஆகியன யாரா லும் பயன்படுத்தப்படா மல் பொதுவாக இருந் தால், அது சர்கார் புறம் போக்காக வகைப்பாடு செய்யப்படும். 

நத்தம் சர்வேயில் கோயில்கள், இடுகாடு கள், சாலைகள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், பூங்காக்கள், பள்ளிகள் மற்றும் இதர பொது மக்களுக்கான பயன் பாட்டு இடங்கள் சர்கார் புறம்போக்காக வகைப் படுத்தப்பட்டிருக்கும் என்று வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை யின் உத்தரவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நத்தம் நில உரிமையாளர்களின் நீண்டகால பிரச் சினைக் குத் தீர்வு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. நில உரிமையாளர்களுக்கு கணினி மயம் மூலம் பட்டா கிடைக்கவும்  வாய்ப்புள்ளது. 

No comments:

Post a Comment