ஒரே நாளில் நான்கு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 2, 2023

ஒரே நாளில் நான்கு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி சாதனை

சென்னை, மே 2- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற குருப்-1 முதல்நிலைத் தேர்வு, டிசம்பரில் நடைபெற்ற சட்டப்பேரவை செய்தியாளர் தேர்வு, மீன்துறை ஆய்வாளர் தேர்வு, கடந்த பிப்ரவரியில் நடை பெற்ற சுகாதார அலுவலர் தேர்வு ஆகிய 4 போட்டித் தேர்வுகளின் முடிவுகளையும், கடந்த 28.4.2023 அன்று இரவு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

அடுத்தகட்டத் தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டி யலை, தேர்வாணையத்தின் இணையதளத்தில்(www.tnpsc.gov.in)தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப் பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி ஆண்டுக்கான தேர்வுகால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தேர்வு முடிவுகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் வெளியிட வேண் டும். 

குறிப்பாக, கணினி வழியில் நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை ஒரே மாதத்தில் வெளியிட வேண்டுமென தேர்வர்கள் வலியு றுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment