நரியமங்கலம், மே 13- பொன்னமராவதி ஒன்றியம் ஒலியமங்கலத்தில் வைக் கம் போராட்ட நூற்றாண்டு விழா தெரு முனைக் கூட்டம் 11.5.2023 அன்று நடைபெற்றது.
பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் வீ.மாவலி கூட்டத் திற்கு தலைமை யேற்று உரையாற் றினார். ஒலியமங்கலம் தி.மு.க. பொறுப்பாளர் ப.சிவக்குமார் வரவேற்புரையாற்றினார்.
புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, பகுத்தறி வாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் அ.சரவணன், மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். திராவிடர் கழக பேச்சாளர் இராம.அன்பழ கன், வைக்கம் போராட்டம் பற்றிய நிகழ்வுகளையும், திராவிட மாடல் ஆட்சியின் சிறப்புகளையும் பற்றி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் ஒலியங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் சோலை யம்மாள் சிவக்குமார், ஒலிய மங்க லம் தி.மு.க. கிளைச் செயலாளர் எம்.சுப்பையா, திராவிடர் கழக மாவட்ட மகளிரணி அமைப்பாளர் வீர.வசந்தா, மாவட்டத் துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பா ளர் இரா.வெள்ளைச்சாமி, பெரி யார் பிஞ்சு ம.தமிழினி, அம்சத்கான் உள் ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர் கழகத் தோழர் ஆறு.பாலச் சந்தர் நன்றி கூறினார். புதிய பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூட்டத் தி னைக் கேட்டுப் பயனடைந்தனர்.
No comments:
Post a Comment