ஆளுநர் மாளிகையை நோக்கி அதிமுக பேரணியாம்!
எதற்காக இந்தப் பேரணி?
திராவிடம் என்பது காலாவதியானது என்று ஆளுநர் பேசியதை கண்டித்தா?
அண்ணாவின் கொள்கைக்கு எதிராக சனாதனம் பற்றி வாய் நீளம் காட்டும் ஆளுநரை கண்டித்தா?
மாநில உரிமைகளை எதிர்த்து அடிக்கடி உதிர்க்கும் ஆளுநரின் திராவிட இயக்க எதிர்ப்பு பேச்சுகளை எதிர்த்தா?
இல்லை, இல்லை. அப்படியெல்லாம் அண்ணா கொள்கையையோ, திராவிட இயக்க கொள்கை யையோ பற்றிப் பேசும் கொள்கை எல்லாம் அண்ணா பெயரில் இயங்கும் கட்சிக்கு அறவே இல்லையே!
கருநாடக மாநிலத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி அதன் பின் வாபஸ் வாங்கிய கட்சி அல்லவா!
இப்பொழுது எதற்கு இந்தப் பேரணி என்றால், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுப் போயிற்றாம்; அதற்காகவாம்!
‘‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் பற்றியும், துப்பாக்கிப் பிரயோகம் பற்றியும் தொலைக் காட்சியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்'' என்று குறட்டை விட்ட அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தி.மு.க. ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்று ஆளுநரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்களாம்.
‘‘ஆடத் தெரியாத சீமாட்டி - முற்றம் கோணல் என்றாராம்....'' அதுதான் நினைவிற்கு வந்து தொலை கிறது.
No comments:
Post a Comment