உயிரிழந்த பெண்ணை உயிருடன் கொண்டு வர பூஜையாம் மோசடி பூசாரியை கொன்ற கணவர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 31, 2023

உயிரிழந்த பெண்ணை உயிருடன் கொண்டு வர பூஜையாம் மோசடி பூசாரியை கொன்ற கணவர்!

மும்பை, மே 31 - மராட்டிய மாநிலம் மான்டவி என்ற பகுதியில் கடந்த 25.5.2023 அன்று அதிகாலை வயதான நபரின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தரப்பட்ட நிலையில், அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த நபர் பிவா வைதா என்றும் அவர் ஒரு பூசாரி என்றும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவிக்களை ஆய்வு செய்த போது தான் அதிர்ச்சி உண்மை அம்பலமானது. பூசாரியை கொலை செய்த நபர் வினோத் என்ற 34 வயது நபர் என்று கண்டுபிடித்தனர்.

இவரிடம் விசாரணை மேற்கொண்டதில் காவலாளியை பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 2017இல் ஒரு வாட்ச்மேனை கொலை செய்த வழக்கில் வினோத் சிறைக்கு சென்றவர். கோவிட் காலத்தில் இவர் பிணை பெற்று இரண்டு ஆண்டுகளாக வெளியே உள்ளார்.

இவரது மனைவி சமீபத்தில் உயிரிழந்த நிலையில், உயிரிழந்த தனது மனைவியை மந்திரீக பூஜைகள் மூலம் மீண்டும் உயிருடன் கொண்டு வர வேண்டும் என அந்த பூசாரியை அணுகியுள்ளார். பூசாரியும் இவரிடம் ரூ.2,000 பெற்றுக்கொண்டு பூஜைகளை செய்துள்ளார்.

மனைவி உயிருடன் வராத நிலையில், பூசாரியிடம் சென்று தகராறு செய்த வினோத் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். பூசாரி பணத்தை தராத நிலையில், ஆத்திரமடைந்த வினோத் பூசாரியின் தலையை கல்லின் மீது மோதி தாக்கி கொலை செய்துள்ளார். காவல்துறையினரால் வினோத் கைது செய்யப்பட்டு, கொலைவழக்கில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment