லக்னோ, மே 14- பாஜகவின் எதிர்மறை மற்றும் வகுப்புவாத அரசியலுக்கு முடிவு கட்டத் தொடங்கி யுள்ளதாக சமாஜ்வாதி தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில்,
கருநாடகத்தில் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு காங்கிரஸ் கட்சி பெரும் பான்மை வகித்து முன்னிலை பெற்றுள்ளது.
பாஜகவின் எதிர்மறை, வகுப்புவாதம், ஊழல், பணக்காரர்களுக்கு ஆதரவு, பெண் களுக்கு எதிராக மற்றும் இளைஞர்களுக்கு எதிரான சமூகத்தைப் பிளவுபடுத்தும் பிர சாரம் இவை அனைத்திற்கும் முடிவு வந்து விட்டது.
பணவீக்கம், வேலையில்லாத் திண் டாட்டம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்பட்ட மோசமான ஆட்சிக்கு எதிராக மக்கள் கொடுத்த நல்ல தீர்ப்பு தான் இது என்று அவர் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment