15.5.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉 ஒன்றிய அளவில் பி.ஆர்.எஸ். உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட காங்கிரஸ் விருப்பம், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கருத்து.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
👉தென்னகம் மொழித் திணிப்பு உள்ளிட்ட எந்த திணிப்பையும் எதிர்த்து நிற்கிறது. தேர்தல் முடிவுகளும் அதனையே எதிரொலிக்கிறது என்கிறது தலையங்க செய்தி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 மணிப்பூரில் நடைபெறும் வன்முறையை அடுத்து, குக்கி சமூகத்தினர் தங்களுக்கு தனி மாநில தகுதி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
தி டெலிகிராப்:
👉பண்டைய இந்தியா, ஜனநாயகத்தின் தாயகம் என அண்மையில் பிரதமர் மோடி கூறியதற்கு எந்தவித வரலாற்று ஆதாரமும் இல்லை என்கிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ரணபீர் சக்ரவர்த்தி.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment