புதுச்சேரி,மே11 - ஜிப்மர் சேவை கட்டண வசூலுக்கு ஜிப்மர் பாதுகாப்புக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜிப்மர் பாது காப்புக்குழு தலைவர் தா.முருகன் வெளியிட்டுள்ள செய் தியில் கூறியிருப்பதாவது:-
தன்வந்திரி மருத்துவமனை 1956ஆம் ஆண்டு பிரஞ்சுகாரர் களின் ஆட்சிக் காலத்தில் புதுச் சேரியில் ஆரம்பிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலம், பிரஞ்சுகாரர் களின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, இந்திய அரசாங் கத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, 1964ஆம் ஆண்டு “ஜவகர் லால் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை யாக அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவால் கட்டமைக் கப்பட்டது.
ஜிப்மர் மருத்துவமனை புதுச் சேரி மக்களுக்கு மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள தமிழ்நாடு பகுதியான விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும், கேரளா, கருநாடகம், ஆந்திரா உள்ளிட்ட தென்மாநில மக்களுக்கும் உயர்தர சிகிச்சையை இலவசமாக அளிக்கக்கூடிய மருத்துவமனையாக விளங்கி வருகின் றது.
ஜிப்மர் மருத்துவமனையை கடந்த 2008 ஆம் ஆண்டு தன்னாட் சியாக மாறுவதை எதிர்த்து, அந்த காலகட்டத்தில் ஒத்தக்கருத் துடைய அனைத்துக் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட ஜிப்மர் பாதுகாப்புக் குழு என்கிற பொது அமைப்பின் மூலமாக, ஒன்றிய அரசை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய மக்கள் போராட்டங்களை நடத்தி, ஏழை, எளிய மக்களுக்கு பயன்தரக் கூடிய உரிமைகளை சட்டப் பூர்வமாக பெற்றது.
அதன்படி ஏழை, எளிய மக்களுக்கு மற்ற ஒன்றிய அரசு மருத்துவமனையில் வழங்கப்படு வதுபோல இலவச மருத்துவம் வழங்கப்பட வேண்டும். இளநிலை மருத்துவப்படிப்பில், மொத்தம் உள்ள இடங்களில் 25 விழுக்காடு புதுச்சேரியை சார்ந்த ஏழை-எளிய நன்கு படிக்கக்கூடிய மாணவர் களுக்கு மருத்துவ இடங்கள் வழங்க வேண்டும்.
இளநிலை மருத்துவப் படிப்புக் கான கட்டணம் மிகக்குறைந்த அளவில் வசூலிக்கப்பட வேண்டும்.
துணைநிலை ஆளுநருக்கு கண்டனம்
ஜிப்மர் மருத்துவமனை தன் னாட்சியாக மாற்றம் பெற்ற பிறகு, தன்னுடைய உயரிய நோக்கமான அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச மருத்துவ சேவை என்கிற நிலை மாறி, ஏழை எளிய மக்களின் உயிரினை வாட்டி, வதைத்து பணம் பறிக்கின்ற செயலில் முழு மூச்சாக இறங்கியுள்ளது.
இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி அண்மையில் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தை விமர்சித்துள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஜிப்மர் பாது காப்புக்குழு வன்மையாக கண் டனம் தெரிவிக்கிறது.
புதுச்சேரி ஜிப்மர் மக்களின் சொத்து. அதை தனியாருக்கு தாரைவார்க்க ஒருபோதும் அனு மதிக்க முடியாது.
சுகாதார சேவை அனை வரின் உரிமை, ஜிப்மரை காப்பாற்றி அனைவருக்கும் இலவச மருத் துவம் என்ற நிலையை ஒன்றி ணைந்து மீட்டெடுக்க போரா டுவோம். இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment