தமிழ் மண்ணிலே பெரியாரின் விதையாலே அண்ணாவின் பயிராகி கலைஞரின் அறுவடையிலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகசூலில் அமைதிப் பூங்காவான 'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைகளை எடுத்துச் சொல்லி நன்றி சொல்ல நன்றியைவிட உயர்ந்த வேறு சொல் தமிழில் கிடைக்காமல் இன்று வரை சிலையாக நிற்கும் என் நிலை - தமிழ்நாட்டில் பெண்கள் தலை நிமிர்ந்த நிலையிலிருந்து மண்டல் ஆணைய இமயம் அய்யா வி.பி.சிங் அவர்களின் சிலை வரையில் போதைப் பொருட்களை தடை செய்ய நடைபோடும் நம் முதலமைச்சர் சொல்லும் செயலும் சட்டமும், திட்டமும் எதை பாராட்டுவது எப்படிப் பாராட்டுவது எதற்குப் பாராட்டுவது என்று ஒன்றும் புரியாமல் தெரியாமல் அமைதிப் பூங்காவிலே மலர்ந்த மலர்களின் மணம் போல என் மனம் அவதிப்படுகிறது. இருந்தாலும் என் எழுதுகோலின் முனை யின் மூலம் தமிழின் அணையின் உள்ளே வந்து 'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனை யில் என் கண்கள் திறந்து என் கருவிழி நிலாவிலே உலா வந்து ஒவ்வொரு விழா காணும் பலா சுளையான சாதனைகளுக்கெல்லாம் தலா ஒரு நன்றி சொல்ல நேரம் போதாத காரணத்தினாலே துலாபாரத்தின் நடு முள்ளைப் போல என் இதயத்தின் முன்பு இரு கைகள் ஒன்று சேர்த்து வாழைக் குலை போல தலை தாழ்த்தி வணங்குகிறேன்.
கரிசல்பட்டி மு. சுந்தரராசன்
No comments:
Post a Comment