தூத்துக்குடி, மே 8- ஆதிச்சநல்லூரைச் அடுத்த திருக் கோளூரில் நடைபெற்று வரும் அகழாய்வில், சுடுமண் குழாய்கள், செம்புக் காசுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறியும் வகையில், ஆதிச்சநல்லூர் அதனை சுற்றியுள்ள திருக்கோளூர் உள் ளிட்ட பகுதிகளில் தொல்லியல் துறையினர் அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி தொடங்கிய இந்த அகழாய்வில், பண்டைய கால மக்கள் பயன்படுத்திய, பல வண்ணங்கள் கொண்ட பாசிகள், சுடுமண் உருவங்கள், செம்புக் காசுகள், மெருகேற்றப்பட்ட சிவப்பு, கருப்பு நிறத்தி லான பானை உள்ளிட்ட ஏராளமான தொல்லியல் பொருள் கள் கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் தொல்லியில் துறை யினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment