அகமதாபாத், மே 9- குஜராத் மாநிலத்தில், 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு 7,105 பெண்களும், 2017ஆம் ஆண்டு 7,712 பெண்களும், 2018ஆம் ஆண்டு 9,246 பெண்களும், 2019ஆம் ஆண்டு 9,268 பெண்களும், 2020ஆம் ஆண்டு 8,290 பெண்களும் காணாமல் போய் உள்ளனர். 5 ஆண்டுகளில் மொத்தம் 41 ஆயிரத்து 621 பெண்கள் மாயமாகி உள்ளனர்.
இந்தத் தகவல்கள், என்.சி.ஆர்.பி. என்று சொல்லப்படக் கூடிய தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டவை ஆகும். அந்த மாநிலத்தில் 2019-2020 ஆண்டில் அகமதாபாத்திலும், வதோதராவிலும் 4,722 பெண்கள் காணாமல் போய் உள்ளதாக 2021ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மேனாள் அய்.பி.எஸ். அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதிர் சின்கா கூறும்போது, “காணாமல் போன பெண்களைப் பொறுத்த மட்டில், சிறுமிகள் மற்றும் பெண்கள் என சிலர் எப்போதாவது குஜராத்தைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விபசாரத்தில் தள்ளப்படுவதையும் இதில் பல பெண்கள் பெரும் தொகைக்கு வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதையும் நான் கவனித்துள்ளேன்” என கூறி உள்ளார்
இது எல்லாம் அந்த அரசுக்குத் தெரியாமலா நடந்திருக்கும். இது தொடர்பாக ‘குஜராத் ஸ்டோரி’ என்ற திரைப்படம் எடுக்க யாரும் முன்வருவார்களா?
No comments:
Post a Comment