சென்னை,மே24 - இந்திய குடிமைப்பணித் தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார். அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
நேற்று வெளியான இந்திய குடிமைப் பணித் தேர்வில் கொளத்தூரைச் சேர்ந்த செல்வி ஏ.எஸ்.ஜீஜீ அவர்கள் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
கடந்த ஆண்டைவிட அதிகமான அளவில் தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் குடிமைப் பணிக்குத் தேர்வாகியுள்ளது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.
தேர்வு பெறாதவர்கள் துவண்டு போகாமல் தொடர்ந்து முயலுங்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து இந்திய குடிமைப் பணி (ஹிறிஷிசி) தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை உயர வேண்டுமெனத் தமிழ்நாடு அரசு பல இலவசப் பயிற்சித் திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றை அனைவரும் பயன்படுத்தி வெற்றிகண்டு நம் மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பீர்!
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment