நாகையில் மாலை நேர கொள்கைப் பிரச்சாரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 3, 2023

நாகையில் மாலை நேர கொள்கைப் பிரச்சாரம்!

திருச்செங்கட்டாங்குடி, ஏப்-3 நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருச்செங்கட்டாங் குடியில் திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஒருங் கிணைக்கப்பட்ட மாலை நேர கொள்கை பிரச்சார, மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் மாலை 6 மணிக்கு தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மு.குட்டிமணி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் தீபன் சக்கரவர்த்தி, ஒன்றிய இளைஞரணி செய லாளர் ஜி.விஜய் ஆகியோர் தலைமையேற்று உரையாற்றினர். திராவிட மாணவர் கழக சட்டக் கல்லூரி மாநில அமைப்பாளர் மு.இளமாறன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் மகளிரணி தோழர் ரம்யா, சஞ்சய், நாதன், ராஜ்குமார், ஜெகன், தேவன், மகேந்திரன், சஞ்சய், சந்தோஷ், உதயசூரியன், மணிகண்டன், அருண், ஜோதிபாஸ், கஜேந் திரன், பிரசன்னா ஆகிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். எழுச்சியுடன் நடைபெற்ற மாணவர்கள் சந்திப்பு கூட்டம் இரவு 8.30 மணியளவில் நிறைவடைந்தது.

No comments:

Post a Comment