சென்னை,மே27- தமிழ்நாட்டில் மாநில திட்டக்குழு கலைஞரால் உருவாக்கப்பட்டது. மாநில திட்டக்குழு தமிழ்நாடு முதல மைச்சர் தலைமையில் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல் பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச் சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது.
மாநில திட்டக்குழு துணைத் தலைவர் அவர்களின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபு ணர்கள் உறுப்பினர்களாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
மாநிலத் திட்ட குழுவானது கடந்த 2020 ஆம் ஆண்டு மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறு சீரமைப்பு செய்யப்பட்டு அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது கண் காணிப்பது, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களை செயல் படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற் கொண்டு வருகிறது.
மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டது.
அதன்படி பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவின் துணைத் தலைவராகவும், பேராசிரியர் சீனு வாசன் முழுநேர உறுப்பினராக வும் நியமிக்கப் பட்டுள்ளனர். அதேபோல் பேராசிரியர் விஜய பாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், தீனபந்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா, மல்லிகா சீனி வாசன். மருத்துவர் அமலோற்பவ நாதன், சித்த மருத்துவர் சிவ ராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நட ராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப் பினர்களாகவும் நியமனம் செய்யப்பட் டிருந்தனர். இந்நிலையில் மாநில திட்டக் குழுவின் பகுதி நேர உறுப்பினராக ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
மாநில திட்டக்குழுவில் உறுப் பினராக இருந்த, மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தொழில்துறை அமைச்சரான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment