கரோனா தொற்றின்போது ஏற் படும் அறிகுறிகளான தீவிர உடல் அசதி, மூச்சுத் திணறல், தசை பலவீனம் ஆகியவை தொற்று குணமான பின் னும் நீடிப்பதை நீண்ட கோவிட் தொற்று(long covid) என அழைக்கப்படு கிறது. இதனால் ஆறு மாதங்கள் வரை பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற் படுகிறது. பாக்ஸலோவிட்(paxlovid) எனும் மருந்து இந்த கோளாறு ஏற்படுவதைக் குறைப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. தொற்று ஏற்பட்டதற்கு பிறகு ஆறுமாதங்களுக்கு மருத்துவ மனையில் சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியத்தையும் மேலும் இறக்கும் அபாயத்தையும் குறைப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. நீண்ட கோவிட் கோளாறு ஏற்படும் வாய்ப்பை இந்த மருந்து 26% குறைப்பதாக வாசிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நோயியல் நிபுணர் சியாத் அல் - அலி கூறுகிறார்.
இந்த மருந்து இதயக் கோளாறு, இரத்த உறைதல், சிறுநீரக பாதிப்பு, தசை வலி, களைப்பு, மூச்சுத் திணறல் மற்றும் இரு நரம்புக் கோளாறுகளி லிருந்து பாதுகாப்பு அளிக்கிறதாம்.ஆனால் கரோனா தொற்றிற்குப் பிறகு ஏற்படும் ஈரல் கோளாறு, இருமல் அல்லது சர்க்கரை நோய் ஆகியவை ஏற்படும் வாய்ப்பை குறைப்ப தில்லையாம். ஃபைசர் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இம்மருந்து பாதிக்கப் படக் கூடியவர்கள் மருத்துவ மனை சிகிச்சை அல்லது இறப்பு ஏற்படும் வாய்ப்பை குறைப்பதாக இதற்கு முன் காட்டப்பட் டுள்ளது.
இதன் நீண்ட கால விளைவை மதிப்பீடு செய்வதற்காக அல் -அலி குழுவினர் மேனாள் படை வீரர்களின் மருத்துவ ஆவணங்களை பரி சோதனை செய்தனர். 280000 நோயா ளிகள் 2022இல் கோவிட் தொற்று ஏற்பட்டவர்கள்.மேலும் தீவிர நோயை ஏற்படுத்தக்கூடிய குறைந்தது ஒரு இணை நோய் உள்ளவர்கள்.
இதில் கிட்டத்தட்ட 36000 நோயா ளிகள் தொற்று ஏற்பட்ட அய்ந்து நாட்க ளுக்குள் பாக்சிலோவிட் மருந்து எடுத் துக் கொண்டனர். பின் பாக்ஸலோவிட் எடுத்துக்கொண்டவர்களின் குணமாவ தற்கும் எடுத்துக்கொள்ளாதவர்கள் குணமாவதற்கு ஒப்பிடப்பட்டது. மருந்து எடுத்துக் கொண்டவர்களுக்கு தொற்றிற்குப் பின் கோளாறுகள் ஏற்படும் அபாயம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. தடுப்பூசி போட் டுக் கொண்டவர்களுக்கும், போட்டுக் கொள்ளாதவர்களுக்கும் இது பலன ளித்தது. ஆனால் சில ஆய்வாளர்கள் இந்த ஆய்வு நீண்ட கோவிட் கோளாறு என்பது என்ன என்று முழுவதுமாக விளக்கவில்லை என் கிறார்கள். இந்தக் கோளாறை வரைய றுப்பது கடினம். ஆய்விற்குப் பயன் பட்ட மருத்துவ ஆவணங்கள் உதவி கரமாக இருக்கும்; ஆனால் நீண்ட கோவிட என்பதன் குறிப்பானவை அவற்றில் இல்லை.
அவை கரோனா தொற்றின் நீண்ட கால விளைவுகளான இதயக் கோளாறுகள், வாதம் போன்ற வற்றை ஆய்வு செய்ய அவை சிறப்பா னவை. இந்த ஆய்வில் பெரும்பாலும் வெள்ளை இன ஆண்களின் ஆவணங்களே உள்ளதும் ஒரு குறை பாடு. பெண்களின் ஆவணங்கள் சிறுபான்மையாக இருந்தாலும் அவை பத்தாயிரக்கணக்கில் உள்ளன என் பதை அலி சுட்டிக் காட்டுகிறார். ‘இது ஒரு முழுமையான நிவாரணி அல்ல; அபாயத்தைக் குறைக்க உதவும். அவ்வளவுதான் ‘ என்கிறார் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த மோனிகா வேர்டுஸ்கொ- குடீரெஸ்.
No comments:
Post a Comment