வாசிங்டன், மே 5- குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக இந்தியா மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய குழந்தைகளை சொந்த நாட்டுக்கு கடத்தி விடுகின்றனர்.
இதுபோல் கடத்தப்படும் குழந்தைகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்ட நாடுகளை அமெரிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்தியா உள்பட 14 நாடுகள் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவு துறை தயா ரித்த ஆண்டறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. அதில், குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர்களே கடத்தும் வழக்கில் கட்டாய பன்னாட்டு நடைமுறைகளை இந்தியா கடைப்பிடிப்பது இல்லை. இந்த வழக்குகளில் தீர்வு காண்பதற்கு அமெரிக்க அரசுடன் இணைந்து பணியாற்ற இந்திய அதிகாரிகள் தவறி விட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment