இதுதான் பிஜேபி ஆட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 28, 2023

இதுதான் பிஜேபி ஆட்சி!

மகாராட்டிரா அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் விண்ணப்பித்த 94,195 பேரின் நுழைவுச் சீட்டு மோசடி

மகாராட்டிரா, மே 28 - மகாராட் டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் விண்ணப்பித்த 94,195 தேர்வர் களின் ஹால் டிக்கெட்டை ‘டவுன் லோடு’ செய்து மோசடியில் ஈடு பட்ட கல்லூரி மாணவரை காவலர்கள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மகாராட்டிரா மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (எம்பிஎஸ்சி) சார்பில் அரசுப்பணிக்கான தேர்வு கள் அறிவிக்கப்பட்டன. அந்த தேர்வுக்கான இணையதளம் அடையாளம் தெரியாத நபரால் ‘ஹேக்’ செய்யப்பட்டது. அதிர்ச்சி யடைந்த மும்பை சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித் தனர். அவர்கள் துரித நடவடிக்கை எடுத்ததில், 94,195 தேர்வர்களின் நுழைவுச் சீட்டுகள் ‘டவுன்லோடு’ செய்யப்பட்டிருந்தது தெரிய வந் தது.

அதையடுத்து புனேவைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் ரோஹித் காம்ப்ளேவை, நவி மும்பை சைபர் கிரைம் காவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின் றனர்.

மேலும் அவரிடம் இருந்து டெஸ்க்டாப், லேப்டாப் மற்றும் 3 செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நவி மும்பை காவல் ஆணையர் மிலிந்த் பரம்பே கூறுகையில்,

 ‘மகாராட்டிரா மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இணையதள முகவரின் அய்பி முகவரியைக் கண்டுபிடித்து, அதனை ஹேக் செய்துள்ளனர். மகாராட்டிரா முழுவதும் 1,475 மய்யங்களில் 4,66,455 தேர்வரின் விபரங்கள் அந்த இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந் தது. அவர்களில் 94,195 தேர்வர் களின் நுழைவுச் சீட்டுகளை ஹேக்கர்கள் பதிவிறக்கம் செய்துள் ளனர். பின்னர் 94,195 தேர்வர் களின் முகவரியை தொடர்பு கொண்டு, அவர்களிடம் தங்களி டம் மகாராட்டிரா மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவித்துள்ள தேர்வின் வினாத் தாள் உள்ளது என்றும், அதற்காக ஒவ்வொரு வினாத்தாளுக்கும் ரூ.33,000 செலுத்த வேண்டும் என்றும் பேசியுள்ளனர்.

இதற்காக ‘எம்பிஎஸ்சி 2023 ஏ’ என்ற டெலிகிராம் சேனலை பயன்படுத்தி உள்ளனர். 

மகாராட்டிரா மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அளித்த புகாரின் அடிப்படையில், இவ்விகாரத்தில் தொடர்புடைய கல்லூரி மாணவர் ரோஹித் காம்ப்ளேவை கைது செய்துள்ளோம். அவரிடம் நடத் தப்பட்ட விசாரணையில், அவர் பல ஹேக்கர் குழுக்களுடன் தொடர்பு கொண்டு, மகாராட் டிரா மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் இணையதளத்தை ஹேக் செய்துள்ளார். தலைமறை வாக உள்ள காம்ப்ளேயின் உதவியாளரை தேடிவருகிறோம். 

அனுமதி நுழைவு சீட்டுகளை மட்டுமே ‘டவுன்லோடு’ செய்துள் ளனர். மற்றபடி தேர்வு வினாத் தாளை அவர்கள் டவுன்லோடு செய்யவில்லை. இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்களை தேடி வருகிறோம்’ என்றார்.

No comments:

Post a Comment