கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
23.5.2023
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத் தில் அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறைச் செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தியை சந்தித்தார்.இந்த சந்திப் பின் போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்து வது மற்றும் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட் டம் நடைபெறுவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தி டெலிகிராப்:
* புதிய நாடாளுமன்ற திறப்பில் குடியரசுத் தலைவரை மோடி அரசு புறக்கணித்துள்ளது. தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களிடம் இருந்து இந்திய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதை மோடி அரசு உறுதி செய்துள்ளது போல் தெரிகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றச்சாட்டு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment