கவிதைத் துளிகள்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 13, 2023

கவிதைத் துளிகள்...

“குத்தகைப் பிணி...”

‘காலரா... வாந்தி பேதி...’

‘அம்மைப் பிணி’களை

காலங்காலமாய்...

இம்மண்ணில்...

‘மதமடமை தீரும்வரை...’

தொண்ணூற்று ஒன்பது

ஆண்டு நெடுங்குத்தகை

எடுத்த மெகா தெய்வம்...

‘காளியாயி... மாரியாயி...’!

----

“இந்து சனாதனத் தீவிரவாதிகள்”

- சிவ ‘லிங்கம்...!’

- விட்ணு ‘லிங்கம்...!’

- பிரம்ம ‘லிங்கம்...!’

- விசுவ ‘லிங்கம்...!’

- சொர்ண ‘லிங்கம்...!’

- கிருட்டிண ‘லிங்கம்...!’

- பூதலிங்கம்....!

- இராம ‘லிங்கம்...!’

- ஆவுடை ‘லிங்கம்...!’

- (எ) மகா ‘லிங்கம்...!’

= வைத்திய ‘லிங்கம்...!’

----

“வேள்வி....”!

‘கல்வி ஞான’த்தை

முடமாக்கி...

‘கேள்வி ஞான’த்தை

சூனியமாக்க வல்லது...

- ‘வேள்வி...’!

----

“அருங்குணத்தான்...”!

‘குணம்‘ பெரிதென வாழும்

‘அருங் குணத்தான்’ முன்னர்...

‘குலம்‘ என் செய்யும்...?

‘கோத்திரம்‘ என் செய்யும்...?

‘சாஷ்டாங்க நமஸ்காரம்தான்...’

என் ‘பெரிது செய்துவிடும்...’?

- கவிஞர் தி.பஞ்சநாதன், நாவல்பட்டு


No comments:

Post a Comment