செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 7, 2023

செய்திச் சுருக்கம்

மீட்பு

இலங்கையில் இருந்து படகு மூலம் தப்பி வந்து தனுஷ்கோடி அருகே நடுக்கடல் மணல் திட்டில் கைக் குழந்தை உள்பட 10 அகதிகள் தவித்தனர். அவர்களை மீனவர்கள் உதவியுடன் கடலோர காவல் துறையினர் மீட்டனர்.

பொறியியல் கல்வி

2023-2024ஆம் கல்வியாண்டுக்கான பி.இ.,பி.டெக்., பி.ஆர்க்., போன்ற பொறியியல் முதலாம் ஆண்டு படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவை உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி 5.5.2023 அன்று தொடங்கி வைத்தார். கடந்த 2 நாட்களில் மட்டும் பொறியியல் படிப்புகளில் சேர 18,181 பேர் விண்ணப்பப்பதிவு மேற்கொண்டுள்ளார். விண்ணப்பப் பதிவு செய்ய 4.6.2023 அன்று கடைசி நாள் ஆகும்.

சிறப்புப் பயிற்சி

6 வயது முதல் 17 வயதுடைய மாணவ - மாணவி களுக்கு ஆங்கில மொழித் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், அவர்களின் கற்பனைத் திறன், படைப்பாற் றல், புரியாத புதிரை தீர ஆராய்ந்து கற்றுக் கொள்ளும் திறன், கருத்துப் பரிமாற்றத் திறன்களை மேம்படுத்தப்பட பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில கோடை கால சிறப்புப் பயிற்சி முகாம் வருகிற 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு ஷ்ஷ்ஷ்.தீக்ஷீவீtவீsலீநீஷீuஸீநீறீ. வீஸீ/suனீனீமீக்ஷீ-நீணீனீஜீ-2023 என்ற இணைய தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

திட்டம்

ரயில்களில் பயணிகளுடன் மோதல் சம்பவங்கள் நடந்து வருவதால், வெளிப்படைத் தன்மைக்காக, டிக்கெட் பரிசோதகர்களுக்கு ‘பாடி கேமரா' அணியும் முறை சோதனை ரீதியாக அமல்படுத்தப்பட்டது.

உத்தரவு

மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியோர் நலன் கருதி வரும் காலங்களில் தாழ்தள பேருந்துகளை மட்டுமே இயக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


No comments:

Post a Comment