அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 13, 2023

அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு

சென்னை, மே 13 - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக பொருளாளரும் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு சென்னை, சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த மாதம் 14ஆம் தேதி, தி.மு.க. பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டி யலை தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன் வைத்தார். இதையடுத்து குற்றச் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு தாக்கீது கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர் கொள்ளத் தயார் என்றும் அண்ணா மலை தரப்பில் பதில் தாக்கீது அனுப்பப்பட்டது.

இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கடந்த 10ஆம் தேதி கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு 8 வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட் டுள்ளது. இந்நிலையில், நாடாளு மன்ற உறுப்பினரும், தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலு, அண்ணா மலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18ஆவது நீதிமன் றத்தில் நேற்று (12.5.2023) அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனு வில் கூறியிருப்பதாவது:

 1957ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறேன். நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒன்றிய அமைச் சராகவும் பதவி வகித்துள்ளேன். கட்சி யிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறேன். எனக்கு சமுதா யத்திலும், பொதுமக்கள் மத்தியி லும் நற்பெயரும் மரியாதையும் உள்ளது.

அதை சீர்குலைக்கும் விதமாக, களங்கம் ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறான ஆதார மற்ற குற்றச்சாட்டுகளை எனக்கு எதி ராக சுமத்தியுள்ளார். எங்கள் குடும் பத்தினர் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள தாக குற்றம்சாட்டியுள்ளார். 

ஆனால் அவர் கூறும் நிறுவனங் களில், 3 நிறுவனங்களில் மட்டும் சிறு முதலீடு செய்து உள்ளேன். மற்ற நிறுவனங்களில் பங்குதார ராகவும் இல்லை.

பொய்யான குற்றச்சாட்டை கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணா மலை எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இதுதவிர அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. டி.ஆர்.பாலுவுடன் வந்த தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 அண்ணாமலை பேட்டியளித்த அரை மணி நேரத்துக்குள்ளேயே தி.மு.க. சார்பில் பதில் தந்து விட் டோம். அவருக்கு தாக்கீது அனுப்பி ஒரு மாதமாகியும் இதுவரை சட்டரீதியாகப் பதில் சொல்ல வில்லை. அறிக்கை மட்டுமே வெளி யிடுகிறார். போதுமான அவகாசம் கொடுத்த பிறகும், மன்னிப்பு கேட்கா ததால் 2 நாட்களுக்கு முன்பு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பிலும், தற்போது டி.ஆர்.பாலு சார்பிலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

ஓராண்டு தண்டனை பெறுவார்:

திமுகவுக்கு, யார் மீதும் பொய் வழக்கு போடும் பழக்கம் கிடை யாது. திமுக சார்பில் தொடரப் பட்ட அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். நிச்சய மாக அண்ணாமலை ஓராண்டு தண்டனை பெறப் போகிறார். இவ்வாறு அவர் கூறினார். மூத்த வழக்குரைஞர் வில்சன், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட் டோர் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment