நூற்றாண்டு வரலாற்று வாகைசூடிய வைக்கம் பெரியார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

நூற்றாண்டு வரலாற்று வாகைசூடிய வைக்கம் பெரியார்!

- பெருங்கவிக்கோ

பகுத்தறிவுப் பகலவன் - பெரியார்

பாரினில் முதன்மை முழக்கம்

தொகுத்தறப் போராட்டம் வைக்கம் வடிவே - செந்தீச்

சுடரேந்தித் தீண்டாமை தொடரிருள் விடிவே!

தொழுவதோ இறைவனை - ஆனால்

தொடர்வதோ சாதியம் - தெருவில்

உழுதூண் வழங்கிடும் ஒடுக்கப்பட் டார்தாம் - நடந்தே

ஊர்க்கோயில் புறம்செலாதே தடுப்பர் உன்மத்தர்!

மேல்சாதி கீழ்சாதி வேற்றுமை

ஆல்விழு தேவிட்ட தன்மை

வைக்கம்.அக் கோயிலின் வருசுற்றுப் புறமெலாம் - பட்டியல்

மதிமக்கள் வழிபோகாச் சதிவிதி பதித்தார்!

தீண்டாமைக் கொடுமையின் - வேகம்

தீர்நமின் மகாத்மாக் - காந்தி

ஆண்டகைபெரியார்தம் அஞ்சாமை அறிந்தே - தேர்ந்தே

அவ்வைக்கப் போர்க்களம் அனுப்பியே வைத்தார்!

அரிமாஒன்றோ அக்கொடும்போர்க் களத்தில்

அச்சமொன் றறியாமலே - போராடி

சரிசம நீதிக்கே தந்தைநம் பெரியாரோ - தகாதன

தானெதிர் மறவராய் வானுயர்ந்தே எதிர்த்தார்!

மாந்தர்க்குள் என்னடா சாதி

மண்ணாங் கட்டிஅட பேதை

ஆந்தைகள் கோட்டான்கள் அலரிடசனாதன தனமதை

அடர்நெருப் பால்எரித் திடும்வகை உழைத்தார்!

இறைபக்தி நெறிகொன்றே - அந்நாள்

இடர்செய்யு நம்பூதிரிகள் - தம்மின்

முறையிலா வெறிச்சாதிக் குறையுடையாளர்தம் - கொட்ட

மூச்சடங் கிப்போக முனைப்புநம் பெரியாரின்மோதலே!

தான்மட்டு மல்லதம் - குடும்பமே

தாம்வைக்கம் போரிலே சென்று!

வான்முட்டப் போராடி வைக்கம்வெல் வீரரே

வாகைகள் சூடினார் மாத்தமிழர் பெரியாரே!

சிறைக்கோட்டம் பன்முறை அடைத்தார்

தெய்வத்தின் பேராலே ஒன்னார்

பறைமுழக் கம்மிட்டே அறைகூவிப் பெரியாரோ வாகை

பார்புகழ் வைக்கம்வெல் வீரரானாரே!

தந்தைபெரி யார்போலத் தரணியில்

எந்தஓர் தலைவரும் தாமே

தன்னல மறுப்போடே சாதிமத பேதங்கள் - அறுத்தே

தகைசால் புகழ்கண்டதார்? சமநீதிமுறையே வெல்க!

No comments:

Post a Comment