ஒருங்கிணைப்பாளர்கள், தலைமைக் கழக அமைப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!
ஒருங்கிணைப்பாளர்கள், தலைமைக் கழக அமைப்பாளர்களுக்கு தலைமைக் கழகத்தால் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு மாவட்டங்களில் சில முக்கிய மாற்றங்கள்
1). இரா. ஜெயக்குமார்
தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர் ஜெயக் குமாருக்கு கூடுதலாக திருச்சி மாவட்டம்; (அவருக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் கோவை, திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி மாவட்டங்கள்).
2). இரா. குணசேகரன்
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட் டங்களோடு கூடுதலாக தூத்துக்குடி மாவட்டம்.
3). குடந்தை குருசாமி
தஞ்சை, கும்பகோணம், திருச்சி என்பதற்கு பதில் தஞ்சை, கும்பகோணம் ஆகிய இரு மாவட்டங்கள்.
4). மதுரை வே.செல்வம்
மதுரை மாநகர், மதுரை புறநகர் மாவட்டங்கள்
5). திருச்சி மு.சேகர்
திண்டுக்கல், பழனி மாவட்டங்களுடன் கரூர்.
6). ப.ஆல்பர்ட்
லால்குடி, துறையூர் மாவட்டங்கள்.
முக்கிய கவனத்திற்கு
பொறுப்பு அறிவிக்கப்பட்டிருக்கும் ஒருங்கிணைப் பாளர்களும், தலைமைக் கழக அமைப்பாளர்களும் இன்னும் ஒரு வாரத்திற்குள் தங்களது பணி ஏற்பாடு - சுற்றுப் பயண சந்திப்பு - மற்றும் தங்களது கடமை, பொறுப்பு பற்றி ஓரிரு பக்கங்களில் தலைமைக்கு மின்னஞ்சல் மூலமோ, கடிதம் மூலமோ திட்டமிட்டுள்ள செயல்பாடுகள் பற்றி - தாமதமின்றி - உடனே எழுதி அனுப்ப வேண்டும்.
1) தங்களின் பொறுப்பு மாவட்டங்கள்
2) அவைகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி முதலியவை பற்றி, அங்குள்ள அமைப்புகள் - செயற்பாடு - எப்படிப் பணிகள் செய்திட திட்டம் மாவட்டக் கழகத்தின் பொறுப்பாளர்களுடன் சந்திப்புத் திட்டம் என்பனவற்றை இதன்மூலம் அறிவிக்க வேண்டுகிறோம்.
- வீ. அன்புராஜ்,
- முனைவர் துரை. சந்திரசேகரன்
பொதுச் செயலாளர்கள்
No comments:
Post a Comment