தாம்பரத்தில் பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 16, 2023

தாம்பரத்தில் பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டம்

தாம்பரம், மே 16 - தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் தாம்பரம் பெரியார் நூலக வாசகர் வட்டம் தொடங் கப்பட்டுள்ளது. அதன் முதல் கூட்டம் 14.5.2023 அன்று மாலை 5.30 மணியளவில் தொடங்கியது. கூட்டத்திற்கு தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் தலைமை யேற்று தொடக்க உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் முன்னிலை வகித்து கொள்கை கோட்பாடுகள் குறித்து உரையாற்றினார். கூடுவாஞ்சேரி மு.தினேஷ்குமார் (சிறிமிவிலி) "மார்க்ஸ் என்பவர்"என்னும் நூலை திறனாய்வு செய்து புத்தகத்தின் பயனை விளக்கி உரையாற்றி முடிவில் பெரியார்,அம்பேத்கர்,மார்க்ஸ் ஆகியோரின் கொள்கை விளக்கத் தின் அடையாளமாக கருப்பு, நீலம், சிவப்பு நிறங்கள் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் மிகவும் தேவை. தத்துவத் தலைவர்கள் மற்றும் கொள்கைகள் மக்களை காக்கும். ஆகவே நாம் மேற்கண்ட தலைவர்களின் கொள்கை வழியில் நடந்து வரும் காலத்தில் மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ் வோம் என்று கூறி தம் உரையை முடித்தார். தொடர்ந்து நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட தோழர்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோழர்கள் திராவிடர் தொழி லாளர் கழகப் பேரவை மாநில பொருளாளர் கூடுவாஞ்சேரி மா.இராசு, தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேஷ், தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலை வர் மா.குணசேகரன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், சோமங்கலம் இனமாறன், அ.ப.நிர்மலா,அபினா சுருதி,கோவன் சித்தார்த்தன்,ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன், ம.சந்திரன், கிழக்கு தாம்பரம் இராஜன் ஜேம்ஸ், கார்த்திக், முடிச்சூர் என்.எஸ். இளங்கோவன், டி.கே.கோவிந்த சாமி, பழநி மு.அன்புராசு, சிபி அய்எம்எல் தோழர்கள், கிருஷ்ண வேணி,அ.ஆபிரகாம், எஸ்.அன்வர் பாஷா, சி.இராஜேஷ் குமார், தன சேகரன் மற்றும் பெரியார் பிஞ்சு  கா.கவி ஓவியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தாம்பரம் பெரியார் நூலக வாசகர் வட்டத் தின் முதல் கூட்டம் வெகு சிறப்பாக நடந்தேறியது.

No comments:

Post a Comment