கோவை மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 23, 2023

கோவை மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

 கோவை மாவட்டத்தில் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை

ஒன்றியம் தோறும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தெரு முனை கூட்டங்கள்

கோவை, மே 23- கோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் சிவானந்தா காலனியில் உள்ள அரிமா சங்க அரங்கில் மே 22, காலை 10.30 மணி அள வில் மாவட்ட தலைவர் திக செந்தில்நாதன்  தலை மையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் க.வீரமணி, மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ் செல்வம், மாநகர தலை வர் ம.சந்திரசேகர், ஆகி யோர் முன்னிலை வகித்து  உரையாற்றினார்.

திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திர சேகரன்  கருத்துரை வழங்கினார்.

தொடர்ந்து தெற்கு பகுதி செயலாளர் தெ. குமரேசன், கிழக்கு பகுதி செயலாளர் இல.கிருஷ் ணமூர்த்தி, வடக்கு பகுதி செயலாளர் கவி கிருஷ் ணன், மாவட்ட துணை செயலாளர் திக.காளி முத்து, மாவட்ட துணை தலைவர் ஆ.சக்திவேல், மாநகர அமைப்பாளர் வெங்கடேசன், தொழி லாளர் அணி செயலாளர் வெங்கடாசலம், மாநகர செயலாளர் சா.திராவிட மணி, மாநில இளைஞ ரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பழ அன்பரசு, மாநில இளைஞரணி துணை செயலாளர் முனிஸ்வரன், இளைஞ ரணி துணை செயலாளர் தஞ்சை இராஜவேல், தலைமைக் கழக அமைப் பாளர் ஈரோடு த.சண் முகம், மருத்துவர் கவுத மன் உள்ளிட்டோர் தங் கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் சிறப்புரையாற்றினார் 

அப்போது கூறியதாவது.:

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் தெருமுனை கூட்டங் களை நடத்தவும், ஈரோட் டில் நடைபெற்ற பொதுக் குழுவில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்களை செயல்படுத்தவும், கழக தோழர்கள் தங்கள் இல் லங்கள் தோறும் கழகக் கொடியேற்றுவது, கழக கிளைகள் உள்ள பகுதிக ளிலும் கழக அமைப்பு களை புதுப்பிக்க வேண் டும் என்றும் இயக்கத் திற்கு இளைஞர்களை மாணவர்களை புதிய உறுப்பினர்களை சேர்ப் பது, கோவை மாவட் டத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறைகளை நடத்துவது, அதேபோல ,வரும் ஜூன் மாதம் நடைபெறும் குற்றாலம் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் புதிய இளை ஞர்களை மாணவர்களை ஊக்கப்படுத்தி பயிற்சி வகுப்பில் பங்கேற்க செய்வது, கழக ஏடுகள் இதழ்களுக்கு சந்தா சேர்ப்பது, 2025 க்குள் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களி லும் புதிய கழக கிளை களை உருவாக்குவது, கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளில் கழக அமைப்புக்களை பலப்படுத்துவது போன்ற களப்பணிகளில் முழுமூச் சுடன் பொறுப்பாளர்கள் கழக தோழர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று எடுத்துக் கூறி வழிகாட்டி உரையாற்றி னார்.

நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர்கள் 

தாராபுரம் நா.சக்தி வேல், கோவை ச.திலக மணி, திருப்பூர் மாவட்ட தலைவர் யாழ் ஆறுச் சாமி, குன்னூர் மாவட்ட பொறுப்பாளர் மு.நாகேந்திரன், மாநில மாணவரணி துணை செயலாளர் மு.ராகுல், தொழிலாளர் அணி பொருளாளர் முத்து மாலையப்பன், மகளிர் பாசறை தலைவர் கு.தேவிகா, எஸ் தனலட் சுமி, சாவித்திரி, மயில், சம்பத், அவினாசி வெ. குமாரராஜா, பழனியப் பன், திருப்பூர் முத்து முருகேசன், ம.ரமேஸ், கு.முருகானந்தம், முத்து கனேசன், கி.திராவிட எழில், யாழ் வெங்கட், அ.மு.ராஜா, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர்.

நிறைவாக யாழ் வெங்கடேஷ்  நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இரங்கல் தீர்மானம் 1,

கு.வெ.கி.ஆசான் அவர்களின் துணை வியார் சாரதாமணி அம் மையார், கோவை மண்ட லச் செயலாளர் செயல் வீரர் ச.சிற்றரசு, பகுத்தறி வாளர் கழக தோழர் சா. சித்ரவேல் ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இவர்களின் தொண் டிற்கு இக்கூட்டம் வீர வணக்கம் செலுத்துகிறது.

தீர்மானம்: 2

மே- 13இல் ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களிள் தலை மையில் நடைபெற்ற திராவிடக் கழக பொதுக் குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: 3

கோவை மாவட்டத் தில் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை நடத்துவது, அன்றைய பயிற்சிபட்டறையில் புதிய இளைஞர்களை பெருமளவில் பங்கேற்க செய்வது என தீர்மா னிக்கப்படுகின்றது.

தீர்மானம் : 4

கோவை மாவட்டத் தில் ஒன்றியம் தோறும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா. தெருமுனை கூட்டங்களை அனைத்து பகுதியிலும் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம்: 5

புதிய இளைஞர்களை மாணவர்களை இயக்கத் தில் பெருமளவில் உறுப்பினர்களாக இனைப்புது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


No comments:

Post a Comment