எந்த மதத்தின் கொள்கையின் பெருமையும் அந்தந்த மதத்தைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு நாட்டிற்கு உண்டாக்கியிருக்கும் பலன்களைக் கொண்டுதான் நிச்சயிக்க வேண்டுமேயல்லாமல், அது ஒரு காலத்தில் செய்ததாகச் சொல்லப்படும் கதைகளைக் கொண்டோ, அம்மதத் தலைவர்கள் ஒரு காலத்தில் செய்ததாகச் சொல்லப்படும் அற்புதங்களைக்கொண்டோ, வியாக்கியானம் செய்வதால் ஏற்படும் அழகிய கருத்துக்களைக்கொண்டோ, நிச்சயித்துவிட முடியாது. அப்படி நிச்சயிப்பதால், உலகத்திற்கு ஒரு பலனும் ஏற்பட்டு விடாது.
('குடிஅரசு' 25.7.1929)
No comments:
Post a Comment