ஜப்பானில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஜப்பான் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட ''பெரியார் வாழ்க்கை வரலாறு '' நூல் அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 27, 2023

ஜப்பானில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஜப்பான் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட ''பெரியார் வாழ்க்கை வரலாறு '' நூல் அளிப்பு


தமிழ்நாடு முதலமைச்சர் ஜப்பான் சென்றுள்ள நிலையில், ஜப்பான் வாழ் தமிழர்கள் வெகு சிறப்பான வரவேற்பை முதலமைச்சருக்கு வழங்கியுள்ளனர்.

இந்த வரவேற்புக் குழுவின் முக்கிய அங்கமாக திகழ்பவர் தோழர் இரா. செந்தில்குமார் அவர்கள்.

‘‘பெரியார் வாழ்க்கை வரலாறு'', ‘‘வைக்கம் போராட்டம்'' ஆகிய இரண்டு நூல்களையும் ஜப்பான் மொழியில் மொழி பெயர்த்தவர்கள் இரா.செந்தில்குமார் மற்றும் ச.கமலக் கண்ணன் ஆவர். ஆசிரியர் கி.வீரமணி முயற்சியால் உருவாகி வெளி யிடப்பட்ட நூல்கள் இவை.

இந்நிலையில் ஜப்பானில் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த தோழர் இரா.செந்தில்குமார், ஜப்பான் மொழியில் உருவான ‘‘பெரியார் வாழ்க்கை வரலாறு'' நூலைக் கொடுத்து மகிழ்ந்தார்.


No comments:

Post a Comment