திண்டுக்கல், மே 13- 12ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் 600/600 பெற்ற மாணவி நந்தினியை, திராவிடர் கழகத்தின் சார்பில், திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆர். காஞ்சித்துரை, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நா. கமல் குமார், நகர துணைச் செயலாளர் எஸ். செபாஸ்டியன் சின்னப்பர் ஆகியோர் சந்தித்து பயனாடை அணிவித்து, "கல்லூரி பல்கலைக்கழகங்களில் தமிழர் தலைவர்" என்ற நூலை வழங்கினர். மேலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அலைபேசி மூலம் மாண விக்கு வாழ்த்து தெரிவித்தார். மாணவி, தமிழர் தலைவர் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தார்.
திண்டுக்கல் சந்தை ரோடு அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கத்தின் சார்பில், தலைவர் நடராஜன், செயலாளர் வீரபாண்டி யன், பொருளாளர் பிரபாகரன், இணைச் செயலாளர் மனோகரன், துணைச் செயலாளர் பொன்ராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மாணவி நந்தினிக்கு பயனாடை அணிவித்து, சங்கத்தின் சார்பில் 10,000 ரூபாய் பரிசளித்த னர்.
No comments:
Post a Comment