திருநெல்வேலி, மே 13- மகேந் திரகிரி இஸ்ரோ மய்யத் தில், 'செமி கிரையோஜெ னிக் இன்ஜின்' சோதனை வெற்றிகரமாக நடத்தப் பட்டது. திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே மகேந்திரகிரி இஸ்ரோ மய்யத்தில், ராக்கெட்டில் பயன்படுத் தப்படும் கிரையோஜெ னிக் இன்ஜினின் பல் வேறு கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன.
தற் போது இந்தியாவில் முதன் முறையாக காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மய்யத்தில், செமி கிரை யோஜினிக் இன்ஜினின் ஒருங்கிணைந்த இயந்திரம் மற்றும் நிலை சோதனை வசதியில், 2,000 கே.என்., இடைநிலை கட்டமைப் பில் முதல் ஒருங்கிணைந்த சோதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்தனர். 'பவர் ஹெட் டெஸ்ட்' எனப்படும் இடைநிலை கட்டமைப்பு, உந்துதல் அறையைத் தவிர அனைத்து இயந்திர அமைப்புகளை யும் உள்ளடக்கியது.
குறைந்த அழுத்தம் மற்றும் உயர் அழுத்த டர்போ- பம்புகள், எரிவாயு ஜெனரேட்டர் மற்றும் கட்டுப்பாட்டு கூறுகள் உட்பட உந்து சக்தி ஊட்ட அமைப்பின் வடிவமைப்பை சரி பார்க்க திட்டமிடப்பட்ட தொடரின் முதல் சோதனை நடந்தது. இஸ்ரோவின் திரவ உந்து அமைப்பு மய்யம், இந்திய தொழில் துறை பங்கேற்புடன், 2,000 கே.என்., உந்துதல் கொண்ட செமி கிரை யோஜெனிக் இயந்திரத் தின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டை மேற் கொண்டுள்ளது.
எதிர் கால ஏவுகணை வாகனங்கள் மற்றும் திரவ ஆக்சிஜன், -மண் ணெண்ணெய் உந்து விசை கலவையில் வேலை களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட்ட சோதனையானது, 15 மணி நேரம் நீடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்த சோதனை இஸ் ரோவின் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
No comments:
Post a Comment